மும்பை: அஜித் - விஜய் பற்றி தனது கருத்தை ஒற்றை வரியில் தெரிவித்துள்ளார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்.
ரசிகர்களுடன் சமூக வலைதள பக்கம் மூலமாக நேரடியாக தொடர்பு வைத்துக்கொள்ளும் நடிகர், நடிகைகள் அவ்வப்போது அவர்களுடன் லைவ் சாட்டிங்களில் ஈடுபட்டு சர்ப்ரைஸும் அளிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்கள்.
இந்த நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் #AskSRK என்ற ஹேஷ்டாக்குடன் ரசிகர்களுடன் உரையாடினார். ஷாருக்கானுக்கு இந்தியா முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் அவரது படம், லேட்டஸ்ட் டிரெண்டிங் விஷயங்கள் என பல ஏரியாக்களில் கேள்விகள் குவிந்த நிலையில், ஒவ்வொன்றுக்கும் பொறுமையாக பதில் அளித்தார்.
இதையடுத்து எந்த நடிகர், நடிகைகள் இதுபோன்று உரையாடல் நிகழ்த்தினாலும் தவறாமல் முன்வைக்கப்படும் கேள்வியாக அஜித் - விஜய் குறித்து கருத்து தெரிவிக்குமாறு இரு நடிகர்களின் ரசிகர்களாலும் கேட்கப்படுகிறது.
எந்த நடிகராலும் தவிர்க்க முடியாத இந்தக் கேள்விக்கு, ஷாருக் ஒற்றை வரியில் அசத்தலான பதில் அளித்துள்ளார். அதில், ஒற்றை வரியில் அஜித் பற்றி கூறுங்கள் என் அஜித் ரசிகர்கள் கேட்டதற்கு - எனது நண்பர் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
My friend. https://t.co/0WFjM1FLca
— Shah Rukh Khan (@iamsrk) October 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">My friend. https://t.co/0WFjM1FLca
— Shah Rukh Khan (@iamsrk) October 8, 2019My friend. https://t.co/0WFjM1FLca
— Shah Rukh Khan (@iamsrk) October 8, 2019
இதேபோல், விஜய் ரசிகர்களும் ஒற்றை வரியில் விஜய் பற்றி கூறுங்கள் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, அற்புதமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
Awesome https://t.co/SLap0VhEpu
— Shah Rukh Khan (@iamsrk) October 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Awesome https://t.co/SLap0VhEpu
— Shah Rukh Khan (@iamsrk) October 8, 2019Awesome https://t.co/SLap0VhEpu
— Shah Rukh Khan (@iamsrk) October 8, 2019
இதைத்தொடர்ந்து ஷாருக்கின் இந்த பதில்களை இரு நடிகர்களின் ரசிகர்களும் வைரலாக்கிவருகின்றனர்.
-
I love him. https://t.co/emq18i0xoM
— Shah Rukh Khan (@iamsrk) October 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I love him. https://t.co/emq18i0xoM
— Shah Rukh Khan (@iamsrk) October 8, 2019I love him. https://t.co/emq18i0xoM
— Shah Rukh Khan (@iamsrk) October 8, 2019
மேலும் தனுஷ் குறித்து கேட்டதற்கு, நான் அவரை நேசிக்கிறேன் என்று கூறியுள்ளார்.