தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடி தங்கள் மணவாழ்க்கை முடிவுக்கு வருவதாக நேற்று முன்தினம் (ஜன.17) சமூகவலைதள பக்கங்களின் மூலம் தெரிவித்தனர். இதனால் தனுஷ், ரஜினி ரசிகர்கள் உள்பட அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இந்த ஜோடியின் முடிவு குறித்து பலரும் ஆறுதலாகவும், எதிர்மறையாகவும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
பிரச்னையின் உச்சத்தில் ட்விட்
தனுஷ் - ஐஸ்வர்யா பிரச்னை குறித்து, இயக்குநரும், தனுஷின் சகோதரருமான செல்வராகவன் கடந்த டிசம்பரிலேயே ட்விட்டரில் மறைமுகமாக பதிவிட்டுள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 3ஆம் தேதி செல்வராகவன் வெளியிட்டிருந்த பதிவில், “தயவுசெய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும்போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டுவிட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு பிரச்னையே இருக்காது. இல்லை, நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
தனுஷ் - ஐஸ்வர்யா இருவருக்கும் இடையேயான பிரச்னை உச்சத்தில் இருக்கும்போதுதான், செல்வராகவன் இவ்வாறு பதிவிட்டிருக்கக் கூடும் என கூறிவருகின்றனர் நெட்டிசன்கள். சமீபகாலமாக செல்வராகாவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்க்கை தத்துவங்களை அதிகமாக பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'வீரமே வாகை சூடும்' ட்ரெய்லருக்கு காத்திருக்கும் ரசிகர்கள்!