தமிழ் சினிமா கண்ட தனித்துவமான இயக்குநர்களில் செல்வராகவனும் ஒருவர். பிரமிக்க வைக்கும் கதை முதல் சர்ச்சைக்குரிய கதை வரை அவர் கை வைக்காத கதைக்களமே இல்லை. நடிகர்களைத் தாண்டி செல்வராகவன் படம் என்பதற்காகவே திரையரங்குக்கு வரும் ரசிகர்கள் ஏராளம். கடைசியாக அவர் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘என்ஜிகே’ திரைப்படம் வெளியானது.
செல்வராகவன் அடுத்ததாக ’புதுப்பேட்டை 2’ படத்திற்கான தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. பொதுவாக அமைதியாக இருக்கும் செல்வராகவன், இந்த ஊரடங்கு காலத்தில் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் ஆக்ட்டிவாக இருக்கிறார். அந்த வகையில், சமீபத்தில் சிறந்த உறவை எப்படிக் கையாள்வது எப்படி என்பது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் ஒரு பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று (ஆக. 11) கடந்த காலத்தில் ஒரு நாள் திரும்பிக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், ”நான், நண்பர்களுடன் மாலை முழுவதும் அரட்டை அடித்து, விளையாடி, தூரத்தில் அப்பா நிழல் பார்த்து, வீட்டிற்கு ஓடி, அம்மா வைத்ததை சாப்பிட்டு, எந்தக் கவலையும் இல்லாது தூங்கிப் போன பொழுதைக் கேட்பேன்.
அல்லது, காலை முதல் தெரு ஓரம் காத்திருந்து அவள் என்னைக் கடந்து போகையில் உரசும் விழிகளின் தாக்கம் கேட்பேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
'அவள் விழிகளின் தாக்கம் கேட்பேன்' - செல்வராகவனின் ரசனையான ட்வீட்! - இயக்குனர் செல்வராகவனின் படங்கள்
கடந்த காலத்தில் ஒரு நாள் திரும்பிக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள் என்ற கேள்விக்கு இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.
!['அவள் விழிகளின் தாக்கம் கேட்பேன்' - செல்வராகவனின் ரசனையான ட்வீட்! செல்வராகவன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-05:42:47:1597147967-selvaragavan-2-1108newsroom-1597147948-721.jpg?imwidth=3840)