சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் இரண்டு ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் நெஞ்சம் மறப்பதில்லை படம் குறித்து புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, ரெஜினா, நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை. திகில் பாணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் தயாரிப்புப் பணிகள் அனைத்தும் முடிந்து 2017, ஜூன் 30ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், அதே ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வந்ததால், கேளிக்கை வரி குறித்து சிக்கல் எழுந்த நிலையில் படத்தில் ரிலீஸ் தள்ளிப்போனது. இதன் பின்னர் படம் குறித்த எந்தத் தகவலும் வெளிவராத நிலையில், தற்போது புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர்கள் வெளியிட்டுள்ளனர்.
அதில், இது வேற விளையாட்டு என்ற வரிகளுடன், விரைவில் ரிலீஸாகும் எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் போஸ்டரை படத்தின் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தனது யு1 ரெக்கார்ட்ஸ் பாடல் வெளியீட்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
-
#NenjamMarappathillai coming soon. @iam_SJSuryah @selvaraghavan @thisisysr @ReginaCassandra @Nanditasweta @divomovies
— U1 Records (@U1Records) December 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
▶️ https://t.co/g4lgvlO7RZ pic.twitter.com/esT6t9so4G
">#NenjamMarappathillai coming soon. @iam_SJSuryah @selvaraghavan @thisisysr @ReginaCassandra @Nanditasweta @divomovies
— U1 Records (@U1Records) December 14, 2019
▶️ https://t.co/g4lgvlO7RZ pic.twitter.com/esT6t9so4G#NenjamMarappathillai coming soon. @iam_SJSuryah @selvaraghavan @thisisysr @ReginaCassandra @Nanditasweta @divomovies
— U1 Records (@U1Records) December 14, 2019
▶️ https://t.co/g4lgvlO7RZ pic.twitter.com/esT6t9so4G
2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படத்தை ஜிஎல்ஓ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்தது. அத்துடன் தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் காம்போ என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இயக்குநர் செல்வராகவன், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணன் ஆகியோர் மீண்டும் ஒன்றாக இணைந்து படத்தில் பணியாற்றியுள்ளனர். இதன் காரணமாக படம் மீது ரசிகர்களுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
விறுவிறுப்பாக படத்தின் பணிகள் நடைபெற்ற நிலையில், படத்தின் டீஸர், பாடல்கள், ட்ரெய்லர் என அடுத்தடுத்து வெளியிடப்பட்டன. இவை அனைத்தும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.
படத்தின் ட்ரெய்லரில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பு, யுவனின் பின்னணி இசை பெரிதும் பேசப்பட்டது. ஆனால் படம் சொன்ன தேதியில் வெளியாகாதது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றமாக இருந்தது.
இந்தப் படத்தின் இயக்குநர் செல்வராகவன் அடுத்ததாக சூர்யாவை வைத்து என்ஜிகே என்ற படத்தை எடுத்து ரிலீஸ் செய்துவிட்டார். இதே போல் யுவன் ஷங்கர் ராஜாவும் ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். படத்தின் நாயகன் எஸ்.ஜே. சூர்யாவும் பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார்.
இருப்பினும் இவர்கள் இருவரிடமும் நெஞ்சம் மறப்பதில்லை படம் குறித்த கேள்வி ரசிகர்களால் தொடர்ந்து கேட்கப்பட்டுவந்த நிலையில் இவர்களிடம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் பதில் இல்லாமல் இருந்தது. இதையடுத்து தற்போது அதற்கான பதில் கிடைத்திருக்கிறது.
படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடவில்லை என்றாலும், நீண்ட நாட்களுக்கு பிறகு படம் குறித்து அப்டேட் வெளியாகி இருப்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பு மீண்டும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.