கோலிவுட்டில் டாப் ஹீரோவாக வலம் வரும் விஜய் சேதுபதி, நடிகர் என்பதைத் தாண்டி, ரசிகர்களை நன்கு மதிக்க தெரிந்தவர் என்று கூறப்படுகிறார். அதனால்தான் அவர் ரசிகர்களால் ‘மக்கள் செல்வன்’ என்று அழைக்கப்படுகிறார். விஜய் சேதுபதி கடந்த 16ஆம் தேதி தனது 42ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினர்.
இந்த நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், இயக்குநர் சீனு ராமசாமி கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கவிதை தற்போது பாடலாக தமிழ் சினிமாவில் வரவுள்ளதாம். அப்பாடலுக்கு இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தன் இசைமைக்கவுள்ளார்.
-
Dir @seenuramasamy Special Poem for @VijaySethuOffl Birthday pic.twitter.com/dG1Fjdjjql
— Nikkil (@onlynikil) January 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Dir @seenuramasamy Special Poem for @VijaySethuOffl Birthday pic.twitter.com/dG1Fjdjjql
— Nikkil (@onlynikil) January 25, 2020Dir @seenuramasamy Special Poem for @VijaySethuOffl Birthday pic.twitter.com/dG1Fjdjjql
— Nikkil (@onlynikil) January 25, 2020
'ரசிகனை ரசிக்கும், ரசிகனே வா..' என்று தொடங்கும் கவிதை, தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. மேலும் இப்பாட்டிற்காக ஆவலாக காத்து இருக்கிறோம் என்று மக்கள் செல்வனின் ரசிகர்கள் கூறியுள்ளனர். முன்னதாக விஜய் சேதுபதியை வைத்து சீனு ராமசாமி, தர்மதுரை, மாமனிதன், இடம் பொருள் ஏவல் போன்ற படங்களை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிங்கப்பெண்ணே.... பிகில் நாயகி அமிர்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!