இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ’நம்ம வீட்டு பிள்ளை’ என்ற படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரும் இன்று மாலை வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
![நம்ம வீட்டு பிள்ளை, செகன்ட் லுக் போஸ்டர், சிவகார்த்திகேயன்,](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4116872_secondlook.jpg)
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்திருக்கிறார். மேலும் முக்கிய வேடங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரகனி, நட்டி நடராஜ், ஆர்.கே சுரேஷ், சூரி, யோகிபாபு போன்ற முன்னணி நட்சத்திரங்களும் நடித்திருக்கின்றனர். டி. இமான் இசையமைத்திருக்கும் இத்திரைப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டிங் செய்துள்ளார்.