’வாயை மூடி பேசவும்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஷான் ரோல்டன். அதன்பிறகு ’சதுரங்க வேட்டை’, ’முண்டாசுபட்டி’, ‘ஜோக்கர்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் புகழடையத் தொடங்கினார். இந்த சூழலில் தனுஷ் தான் இயக்கிய ‘பவர் பாண்டி’ படத்துக்கு ஷான் ரோல்டனை புக் செய்தார். ‘பவர் பாண்டி’ படத்தின் பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட். அதன்பிறகு தனது ‘விஐபி 2’ படத்திலும் ஷானுக்கு தனுஷ் வாய்ப்பளித்தார்.
தற்போது செல்வராகவன் தனுஷை வைத்து இயக்கவுள்ள படத்துக்கு ஷான் ரோல்டனை புக் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் செல்வா - யுவன் கூட்டணியில் மீண்டும் விரிசல் என வதந்திகள் பரவிவருகின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.