ETV Bharat / sitara

சென்னை மெட்ரோ ரயிலில் 22.74 லட்சம் பேர் பயணம் - script on chennai metro

madras
madras
author img

By

Published : Sep 3, 2021, 6:26 AM IST

சென்னை: கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 22.74 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பொதுமுடக்க தளர்வுகளைத் தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் கடந்த ஜூன் 21ஆம் தேதி முதல் 50% இருக்கை வசதிகளுடன் மீண்டும் தொடங்கியது. 21.06.2021 முதல் 31.08.2021வரை மொத்தம் 44.76.111 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாகவும், 21.06.2021 முதல் 30.06.2021வரை 3.55,579 பேர் பயணம் செய்துள்ளதாகவும், 01.07.2021 முதல் 31.07,2021 வரை 18,46,466 நபர்கள் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

01.08.2021 முதல் 31.08.2021வரை மொத்தம் 22,74,066 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

அதிகபட்சமாக கடந்த 27ஆம் தேதி 88,579 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 35,180 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர், மேலும் பயண அட்டை பயணச்சீட்டு (Travel Cand Ticketing System) முறையைப் பயன்படுத்தி 12,19,967 பயணிகள் பயணம் செய்துள்ளனர் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டில் ஒருவழிப்பயண அட்டை, இருவழிப்பயண அட்டை, பலவழி பயன்பாடு அட்டை ஆகியவற்றில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 20% கட்டணத் தள்ளுபடி அளித்துவருகிறது.

மெட்ரோ ரயில் பயண அட்டைகளை (Travel Cirl) பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 22.02.2021 முதல் 20% கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

முக கவசத்தை அணியாமல் அல்லது சரியாக அணியாமல் பயணம் செய்ததற்காக 242 பயணிகளிடமிருந்து அபராதமாக ரூ.48,400 வசூலிக்கப்பட்டுள்ளன.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.