ஆர்யா- சாயிஷா ஜோடி முதல் முறையாக இணைந்து நடித்த படம் 'கஜினிகாந்த்'. அப்படம் மூலம் இருவருக்குமே இடையே காதல் ஏற்பட கடந்த ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்குப் பிறகு இருவரும் இணைந்து சக்தி சௌந்தர் ராஜன் இயக்கும் 'டெடி' படத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் ஆர்யா- சாயிஷா ஜோடிக்கு திருமணமாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதையொட்டி சயீஷா, ஆர்யா மீதுள்ள காதலை வெளிப்படுத்தும்வகையில் ட்வீட் ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், ''எல்லா வழிகளிலும் என்னை நிறைவுசெய்த மனிதனுக்குத் திருமண நாள் வாழ்த்துகள். நீங்கள் இல்லாத வாழ்க்கை என்னால் கற்பனை செய்ய முடியாது ஜான். நான் உங்களை எப்போதும் நேசிப்பேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். இதைக் கண்ட ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
முதலாமாண்டு திருமண நாளை முன்னிட்டு ஆர்யா- சாயிஷா நடித்துள்ள 'டெடி' படத்தின் டீசர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கால் செய்தால் கொரோனா- மிரண்டு போன மாதவன்!