சீனாவிலிருந்து பரவிய கோவிட்-19 பெருந்தொற்று இந்தியாவிலும் வேகமாகப் பரவிவருகிறது. இந்தப் பெருந்தொற்றைத் தடுக்க முறையான மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், அதிலிருந்து எப்படித் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் பிரபல நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ளார்.
அவர் பேசியதாவது, "கரோனா வைரஸ் முதியவர்களையும், சிறு வயது குழந்தைகளையுமே அதிகமாகத் தாக்குகிறது. உயிர்க்கொல்லி நோயாக உருவெடுத்திருக்கும் கரோனாவிற்கு முறையான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், தாக்குதலிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வது அவசியமாகிறது.
நெல்லிக்காய், எலுமிச்சை, புரோக்கோலி, ஆரஞ்சு, திராட்சை, தக்காளி போன்றவற்றில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ‘வைட்டமின்-சி’ நிறைந்திருக்கிறது.
இவற்றை அடிக்கடி உட்கொள்வதன் மூலம், நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். சிலருக்கு இவை போதுமானதாக இருக்கும். ஆனால் ஒருசிலருக்கு ‘வைரஸ்’ தொற்றை எதிர்க்கக் கூடுதலான வைட்டமின்கள் தேவைப்படும்.
அதனால் ‘வைட்டமின்-சி’ சத்து நிறைந்த மருந்து-மாத்திரைகள், லேகியங்களை மருத்துவர்களிடம் ஆலோசித்து எடுத்துக்கொள்ளலாம்" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 'கரோனா மாதிரி திடீர், திடீர்னு கிளப்புறாங்க'- போலி கணக்கு குறித்து வடிவேலு!