சென்னை: சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராஜவம்சம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது.
சசிகுமார், நிக்கி கல்ராணி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ராஜவம்சம். இதை புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கியுள்ளார்.
செந்தூர் பிலிம்ஸ் டி.டி.ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார்.
மேலும் விஜயகுமார், ராதாரவி, தம்பிராமையா, யோகிபாபு, சிங்கம்புலி, மனோபாலா, சதீஷ் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் பெயருக்கு ஏற்றார்போல் குடும்பப் படமாக எடுக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.