ETV Bharat / sitara

'பிறந்தாள் பராசக்தி' - சரத்குமார் குடும்பம் நடத்தும் 'கிடாச் சண்டை' - sarath kumar and radhika

கிடாச் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்படுள்ள 'பிறந்தாள் பராசக்தி' படத்தில் சரத்குமார், ராதிகா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் இணைந்து பணியாற்றியுள்ளனர். இதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

#PeranthalParasakthi
author img

By

Published : Sep 29, 2019, 2:19 PM IST

அறிமுக இயக்குநர் ஓம் விஜய் இயக்கத்தில் சரத்குமார், ராதிகா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘பிறந்தாள் பராசக்தி’. கிடாச் சண்டையை மையப்படுத்திய குடும்பப் படமாக இது உருவாகியுள்ளது. இந்தப் படத்தை ராதிகா தனது ராடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

இதுகுறித்து வரலட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில், ’இந்தப் படத்தில் நடித்தது மிகவும் உற்சாகமாக இருந்தது. இது எனக்கு பலவகையில் ஸ்பெஷலான படம். என் அன்பான அப்பா சரத்குமாருடனும், பழம்பெரும்நடிகை சித்தி ராதிகாவுடனும் இணைந்து நடித்துள்ளேன். இதன் டீசரை கண்டு மகிழுங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட ’வெல்வெட் நகரம்’, ’கன்னி ராசி’ உள்ளிட்ட சில படங்கள் வரலட்சுமி சரத்குமார் வசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க: விஜய் அரசியலுக்கு வருவாரா ? பதிலளித்த சந்திரசேகர்

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.