ETV Bharat / sitara

உருவ கேலி செய்தவருக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகை சனுஷா - latest cinema news

ஒரு நபரை நோக்கி நீங்கள் இரண்டு விரல்களைக் காட்டினால், மற்ற மூன்று விரல்கள் உங்களைச் சுட்டிக் காட்டி பேசும் என்பதை மறந்துவிடாதீர்கள் என நடிகை சனுஷா தெரிவித்துள்ளார்.

சனுஷா
சனுஷா
author img

By

Published : Jun 13, 2021, 9:55 AM IST

சென்னை: நடிகை சனுஷா தனது உடல் எடை குறித்து கேலி செய்தவருக்குத் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் 'ரேனிகுண்டா’ படம் மூலம் அறிமுகமானவர், நடிகை சனுஷா. இதனையடுத்து 'பீமா', 'நாளை நமதே' உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சனுஷா, தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய உடல் எடை குறித்து கேலி செய்தவருக்குப் பதிலடி கொடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், 'என்னை விட என் உடல் எடை மீது அதிகமாக கவலைப்பட்டவர்களுக்குத் தான் இந்தப் பதிவு. ஒருவரது உடலைக் கேலி செய்யும் அளவுக்கு உங்களுக்குத் தைரியம் இருக்கிறது என்றால், அதற்கு முன் ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

உருவ கேலி செய்தவருக்கு தக்க பதிலடி கொடுத்த சனுஷா

ஒரு நபரை நோக்கி நீங்கள் இரண்டு விரல்களைக் காட்டினால், மற்ற மூன்று விரல்கள் உங்களைச் சுட்டிக் காட்டி பேசும். முதலில் நீங்கள் உங்களையும், உங்கள் மனதையும் பார்த்துக் கொள்ளுங்கள்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: லாக்டவுனை பயனுள்ள வகையில் செலவிடும் சிவகார்த்திகேயன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.