ETV Bharat / sitara

சினிமாவாகிறது விளையாட்டு வீராங்கனை சாந்தி செளந்தரராஜனின் வாழ்க்கை வரலாறு! - santhi sounthararajan's biopic

இந்தியாவிற்கு 12 சர்வதேச பதக்கங்களையும், தன் சொந்த மாநிலமான தமிழ்நாட்டிற்கு 50 பதக்கங்களுக்கு மேல் வென்ற தடகள வீராங்கனை சாந்தி செளந்தரராஜனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்கப்படுகிறது.

சாந்தி செளந்தரராஜனின் வாழ்க்கை வரலாறு
சாந்தி செளந்தரராஜனின் வாழ்க்கை வரலாறு
author img

By

Published : Mar 15, 2021, 4:42 PM IST

Updated : Mar 15, 2021, 5:06 PM IST

தடகள வீராங்கனை சாந்தி சௌந்தரராஜனின் வாழ்க்கை வரலாறு சினிமா திரைப்படமாகிறது. 888 புரொடக்‌ஷன்ஸ் முதல் தயாரிப்பான இப்படத்தை, எழுதி இயக்குபவர் ஜெயசீலன் தவப்புதல்வி. திரைப்படத்திற்கு 'சாந்தி செளந்தரராஜன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதுவரை பல படங்களை விநியோகம் செய்துவரும் 888 Productions நிறுவனம் முதன் முறையாக தயாரிப்புத் துறையில் தடம்பதிக்கிறது. கடந்தாண்டு மம்மூட்டி நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற 'மாமாங்கம்' திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய மனோஜ் பிள்ளையிடம் அசோஸியேட் ஒளிப்பதிவாளராகவும், பல படங்களில் இணை, துணை ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றிய ஜெயசீலன் தவப்புதல்வி இந்தப் படத்தின் மூலம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.

இந்தியாவிற்கு 12 சர்வதேச பதக்கங்களையும், தன் சொந்த மாநிலமான தமிழ்நாட்டிற்கு 50 பதக்கங்களுக்கு மேல் வென்ற தடகள வீராங்கனை சாந்தி செளந்தரராஜன். ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ் பெண் சாந்தி செளந்தரராஜன். 2006 ஆசிய விளையாட்டுப் போட்டியில் நடத்தப்பட்ட பாலின சோதனையின் அறிக்கையின் அடிப்படையில், பெண்களுக்கான போட்டியில் தகுதி மறுக்கப்பட்டு அவர் வென்ற வெள்ளிப் பதக்கம் அவரிடமிருந்து திரும்பப் பெறப்பட்டது.

இந்த அவமானகரமான சோதனையின் காரணமாக சாந்தி செளந்தரராஜன் தடகளப் போட்டிகளிலிருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார். அவர் வாழ்க்கையில் நடந்த, இதுவரை வெளிவராத பல சுவாரஸ்யமான சம்பவங்கள், திருப்பங்களுடன் கதை வடிவமைக்கப்பட்டு, முழுக் கதையினையும் சாந்தி செளந்தரராஜனிடம் ஒப்புதல் பெற்று, இக்கதை படமாக்கப்பட உள்ளது.

இப்படத்தில், சாந்தி செளந்தரராஜனின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மூன்று நபர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, ஆஸ்கர் விருதுபெற்ற ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பு செய்கிறார். இப்படத்தின் பாடல்களை யுகபாரதி எழுத, வசனங்கள் பொன் பார்த்திபன் எழுதியுள்ளார். மேலும் இப்படத்தில், ஒளிப்பதிவு - கோபிநாத் டி தேவ், படத்தொகுப்பு - சங்கத்தமிழன் , கலை - காளி. ப்ரேம் குமார், ஒப்பனை - ரஞ்சித் அம்பாடி, உடை - ஜேம்ஸ் ஆப்ரஹாம் - எனப் பல தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றுகின்றனர்.

ஏப்ரலில் தமிழ் புத்தாண்டு தொடங்கும் நாளன்று படத்தின் கதாநாயகியின் அறிவிப்பு வெளியிடப்படும். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, புதுக்கோட்டை அருகே உள்ள சாந்தி செளந்தரராஜனின் கிராமத்தில் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து பஞ்சாப், கத்தார், ஓமன் போன்ற இடங்களில் நடைபெற உள்ளது.

பெண்களின் திறமை மற்றும் வலிமையையும், பெண்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் படத்தின் பல காட்சிகள் நடந்த நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாகிறது.

இதையும் படிங்க:போடுறா வெடிய.. போனிகபூர் வெளியிட்ட 'வலிமை'யான அப்டேட்...!

Last Updated : Mar 15, 2021, 5:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.