கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் - சோல்ஜர் பேக்டரி சார்பில் பிரமாண்டமாக தயாராகிவரும் படம் 'டிக்கிலோனா'. முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்துடன் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கிறார். படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார். சந்தானத்தோடு, இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
நடிகை அனகா, ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படம் மூலம் அறிமுகமான ஷிரின் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். எனர்ஜிடிக் காமெடியன் யோகி பாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், நிழல்கள் ரவி, சித்ரா லட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், ஷாரா என படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இடம்பெற்றுள்ளது.
-
.@thisisysr fans assemble! #Dikkiloona FULL ALBUM out tomorrow! 🎶🎻🎷🥁
— KJR Studios (@kjr_studios) February 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
P.S: Little maestro voice la oru 💔 song iruku!@iamsanthanam @karthikyogitw @SoldiersFactory @sinish_s @AnaghaOfficial @KanchwalaShirin @twitavvi @J0min @sonymusicsouth @proyuvraaj @gobeatroute pic.twitter.com/sg8wVCS2F4
">.@thisisysr fans assemble! #Dikkiloona FULL ALBUM out tomorrow! 🎶🎻🎷🥁
— KJR Studios (@kjr_studios) February 26, 2021
P.S: Little maestro voice la oru 💔 song iruku!@iamsanthanam @karthikyogitw @SoldiersFactory @sinish_s @AnaghaOfficial @KanchwalaShirin @twitavvi @J0min @sonymusicsouth @proyuvraaj @gobeatroute pic.twitter.com/sg8wVCS2F4.@thisisysr fans assemble! #Dikkiloona FULL ALBUM out tomorrow! 🎶🎻🎷🥁
— KJR Studios (@kjr_studios) February 26, 2021
P.S: Little maestro voice la oru 💔 song iruku!@iamsanthanam @karthikyogitw @SoldiersFactory @sinish_s @AnaghaOfficial @KanchwalaShirin @twitavvi @J0min @sonymusicsouth @proyuvraaj @gobeatroute pic.twitter.com/sg8wVCS2F4
சயின்ஸ் பிக்ஷன் பாணியில் டைம் மெஷினை மையமாக வைத்து கதை அமைந்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் இளையராஜாவின் இசையமைப்பில் 1991ஆம் ஆண்டு வெளியான 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் இடம்பெற்றுள்ள 'பேர் வைச்சாலும் வைக்காம' பாடலை யுவன் சங்கர் ராஜா ரீமேக் செய்து கடந்த வாரம் வெளியிட்டிருந்தார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் அனைத்து பாடல்களும் நாளை (பிப்ரவரி 27) வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சந்தானத்திற்கு படக்குழு அளித்த பிறந்தநாள் பரிசு!