ETV Bharat / sitara

ஹாட்டான தோசை கல்லுக்குப்பின் 'ஹாட்' ஆக நிற்கும் சந்தானம்- 'டிக்கிலோனா' செகண்ட் லுக் போஸ்டர் - டிக்கிலோனா செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு

கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ள 'டிக்கிலோனா' திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Santhanam starrer Dikkilona  second look poster release

author img

By

Published : May 28, 2020, 8:55 PM IST

இரட்டை வேடங்களில் கதாநாயகர்கள் நடித்துவருவது சர்வ சாதாரணமாகிப்போன காலத்தில் அவ்வப்போது விஜய் போன்ற நடிகர்கள் மூன்று வேடங்களில் நடித்துள்ளனர். ('நவராத்திரி' சிவாஜி கணேசன், 'தசாவதாரம்' கமல்ஹாசன், தவிர). அந்த லிஸ்டில் தற்போது இணைந்துள்ளார் சந்தானம். இவர் மூன்று வேடங்களில் நடித்துள்ள 'டிக்கிலோனா' திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளத்தை ஒரு கலக்கு கலக்கிவருகிறது.

கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் முக்கியமான அம்சமே கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிப்பதுதான். மேலும் சில முக்கிய பாத்திரங்களில் ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, முனீஸ்காந்த் போன்றவர்கள் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்துள்ளன.

இந்த செகண்ட் லுக் போஸ்டரில் ஆடையில்லாமல் தோசைக்கரண்டிக்குப் பின் சந்தானம் நின்று கொண்டிருக்கிறார். நிச்சயம் படத்தில் வேறொரு சந்தானத்தை எதிர்பார்க்கலாம் என்று ரசிகர்கள் சிலாகித்து கொண்டிருக்கின்றனர். பொருத்திருந்துதான் பார்போமே...!

இதையும் படிங்க... சந்தானத்தின் 'டிக்கிலோனா' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.