கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர் பேக்டரி சார்பில் பிரமாண்டமாக தயாராகிவரும் படம் 'டிக்கிலோனா' முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்துடன் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கிறார். படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார்.
சந்தானத்தோடு, இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நடிகை அனகா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படம் மூலம் அறிமுகமான ஷிரின் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.
எனர்ஜிடிக் காமெடியன் யோகிபாபு, வில்லத்தன காமெடியால் அசத்தும் ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், நிழல்கள் ரவி, சித்ரா லட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், ஷாரா, யூ ட்யூப் ரிவீவர் பிரசாந்த் என படத்தில் மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர்.
படத்துக்கு இசை - யுவன் ஷங்கர் ராஜா. மிகச்சிறந்த டெக்னிக்கல் டீமும் இப்படத்தில் இணைந்துள்ளது. படத்தில் ஹீரோ, வில்லன், காமெடியன் என சந்தானம் மூன்று கெட்டப்புகளில் நடித்துவருவதாகக் கூறப்படுகிறது.
சயின்ஸ் பிக்ஷன் பாணியில் படத்தின் கதை அமைந்திருப்பதாக சொல்லப்படும் நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற உள்ளது. கோடை விடுமுறை கொண்டாட்டமாக இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
-
And, it's a wrap! One of the funniest team we have worked with🤣
— KJR Studios (@kjr_studios) February 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Some cracking updates ahead!😁#Dikkiloona @iamsanthanam @karthikyogitw @thisisysr @SoldiersFactory @AnaghaOfficial @KanchwalaShirin @sinish_s @twitavvi @J0min @Dineshsubbaray1 @keerthivasanA @Arunrajakamaraj pic.twitter.com/kdePswliPw
">And, it's a wrap! One of the funniest team we have worked with🤣
— KJR Studios (@kjr_studios) February 29, 2020
Some cracking updates ahead!😁#Dikkiloona @iamsanthanam @karthikyogitw @thisisysr @SoldiersFactory @AnaghaOfficial @KanchwalaShirin @sinish_s @twitavvi @J0min @Dineshsubbaray1 @keerthivasanA @Arunrajakamaraj pic.twitter.com/kdePswliPwAnd, it's a wrap! One of the funniest team we have worked with🤣
— KJR Studios (@kjr_studios) February 29, 2020
Some cracking updates ahead!😁#Dikkiloona @iamsanthanam @karthikyogitw @thisisysr @SoldiersFactory @AnaghaOfficial @KanchwalaShirin @sinish_s @twitavvi @J0min @Dineshsubbaray1 @keerthivasanA @Arunrajakamaraj pic.twitter.com/kdePswliPw
'ஜென்டில்மேன்' படத்தின் நகைச்சுவை காட்சி ஒன்றில் 'டிக்கிலோனா' என்ற விளையாட்டை அறிமுகப்படுத்தி அதன் மூலம் செந்தில் காமெடி செய்திருப்பார். தற்போது அந்தக் காமெடியை நினைவுபடுத்தும் விதமாக அமைந்திருக்கும் இந்தப் படத்தின் தலைப்பு, படம் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிங்க: 'டிக்கிலோனா'வுக்கு வணக்கம் சொல்லும் ஹர்பஜன்!