சென்னை: மேயாத மான், ஆடை உள்ளிட்ட படங்களை இயக்கிய ரத்னகுமார், தற்போது நடிகர் சந்தானத்தை வைத்து, "குலுகுலு" என்ற படத்தை இயக்கி வருகிறார். காமெடி கலந்த காதல் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
இதில் அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் பயணம் ஒரு முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. படத்தின் மோஷன் போஸ்டர் அண்மையில் வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. தற்போது டப்பிங் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: அஜித், விஜய் பட ஆடை வடிவமைப்பாளர் காலமானார்!