'ராக்கி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அருண் மாதேஸ்வரன். ஆனால், இந்தப் படம் இதுவரை வெளியாகவில்லை. தற்போது அவர் கதாநாயகியை மையமாக வைத்து மற்றொரு படத்தை இயக்கியுள்ளார். அந்தப் படத்திற்கு சாணிக் காயிதம் என பெயரிடப்பட்டுள்ளது.
ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தல 61 படத்தின் இசையமைப்பாளர் இவரா?