ETV Bharat / sitara

தமிழில் 'சங்கத்தமிழன்'...தெலுங்கில் 'விஜய்சேதுபதி'...வெளியான புதிய அப்டேட்!

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் 'சங்கத்தமிழன்' படத்தின் தெலுங்கு பதிப்பின் தலைப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

author img

By

Published : Nov 4, 2019, 8:31 PM IST

SangaThamizhan

இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் 'சங்கத்தமிழன்' திரைப்படம் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவரவிருக்கிறது. இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் வெளிவராது என்று படக்குழு தெரிவித்தது.

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிகை ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ், சூரி, நாசர், ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். பாரதி ரெட்டி தயாரிக்கும் இப்படத்திற்கு விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் பாடல்களும் ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிப்பில் ஆக்ஷன், காதல், சென்டிமென்ட் என கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை, அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

நவம்பர் 15ஆம் தேதி வெள்ளிக் கிழமையன்று படம் ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. விஜய் சேதுபதிக்கு தெலுங்கிலும் மார்கெட் இருப்பதால், இப்படத்தை தெலுங்கிலும் வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளது. இதனையடுத்து தெலுங்கில் இப்படத்திற்கு 'விஜய்சேதுபதி' என்றே தலைப்பு வைத்துள்ளனர் படக்குழுவினர்.

இதையும் வாசிங்க: வெளியாகிறது 'சங்கத்தமிழன்'!

Intro:Body:

Vijay sethupathi Sanga tamilan telugu

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.