பெங்களூருவில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக கன்னட நடிகை அனிகா, ரவீந்திரன், அனூப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அனிகாவிடம் நடத்தப்பட்ட விசாரணையி்ல் அவர் போதை பொருள் விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், இயக்குநர் இந்திரஜீத் லங்கேஷ் கன்னட சினிமாவில் இளம் நடிகர், நடிகைகள் போதை பொருள் பயன்படுத்துவதாக தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து போதை பொருள் பயன்படுத்தும் நடிகர்களின் பட்டியலையும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் ஒப்படைத்தார்.
அந்த வகையில், போதை பொருள் பயன்படுத்தியது மற்றும் போதை பொருள் விற்பனை செய்த நபர்களுடன் தொடர்பில் இருந்ததாக நடிகை ராகினி திவேதி, சஞ்சனா கல்ரானி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, நயாஸ் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், நடிகை சஞ்சனா விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளார். மேலும், இரண்டு நடிகர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, போதைப்பொருள் வழக்கு மற்றும் துஷ்பிரயோக வழக்கின் கீழ் அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரித்து வருகிறது.
இயக்குநர் லங்கேஷ் நடிகை தீபிகா படுகோனேவை கன்னட சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தவர் ஆவார்.
இதையும் படிங்க: நீட் தேர்வு: தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்திலிருந்து 173 கேள்விகள்