பெங்களூரு: போதைப்பொருள் விநியோகம் தொடர்பாக நடிகை சஞ்சனா கல்ராணியை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
பெங்களூருவில் நடைபெறும் பார்ட்டிகளில் போதைப்பொருள் விநியோகம் செய்ததாக நடிகை ராகினி திவேதி கைது செய்யப்பட்டதன் தொடர்ச்சியா சஞ்சனா கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற அனுமதி பெற்று சஞ்சனா வீட்டில் சோதனை மேற்கொண்ட மத்திய குற்றப் பிரிவு காவலர்கள், அவருக்கு போதைப்பொருள் விநியோகிக்கும் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கைது செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி கர்நாடகாவில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடும் பலர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவரது டைரியில் 15 திரைத்துறை பிரபலங்கள் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. அதை ஆதரமாக வைத்து விசாரித்து, ரவி, ராகினி, சஞ்சனா உள்ளிட்டோரை கைது செய்திருப்பதாக காவல் துணை கண்காணிப்பாளர் சந்தீப் பட்டில் தெரிவித்துள்ளார்.