ETV Bharat / sitara

சஞ்சனா கல்ராணி, ராகினி திவேதி ஆகியோரின் பிணை நிராகரிப்பு! - கன்னட திரையுலகம்

போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக கன்னட நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகினி திவேதி ஆகியோர் விண்ணப்பித்த பிணையை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது.

Sandalwood Drug Case
Sandalwood Drug Case
author img

By

Published : Oct 28, 2020, 5:52 PM IST

கன்னட திரையுலகில் நிலவிவரும் போதைப் பொருள் பயன்பாடு தொடர்பாக கைது செய்யப்பட்ட சஞ்சனா, ராகினி ஆகியோர் விண்ணப்பித்த பிணையை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

போதைப் பொருள் தொடர்பான வழக்குகளை கையாளும் நீதிமன்றம் இந்த வழக்கில் தொடர்புடைய வினய் குமார், சிவ பிரகாஷ் ஆகியோரின் பிணை மனுவை தள்ளுபடி செய்திருந்தது. அவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்த போதைப் பொருள் வழக்கில் விவேக் ஓபராயின் மைத்துனர் ஆதித்யா ஆல்வா பெயரும் இடம்பெற்றுள்ளது.

பிரபலங்களுக்கு பார்ட்டி அமைத்துத் தரும் விரன் கண்ணா, போதைப் பொருள் விற்பவர்களாக கருதப்படும் லூம் பெப்பர் சாம்பா, ராகுல் தோன்ஸ், பிரசாந்த் ரங்கா, நியாஷ் ஆகியோரை காவல் துறையினர் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.