பழம்தமிழர் பண்பாட்டின் சிறப்பம்சங்களை எடுத்துரைக்கும்விதமாக கடந்த சில நாட்களுக்குமுன் வெளியிடப்பட்ட கீழடி அகழாய்வு தொடர்பான முடிவுகள் அமைந்திருந்தன.
இந்த ஆய்வில் முக்கிய அம்சமாக, கீழடி நாகரிகம் இரண்டாயிரத்து 600 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. அப்போதைய மக்கள் எழுத்தறிவோடு வாழ்ந்துள்ளனர் என்ற தகவல் தமிழனின் பெருமையை பறைசாற்றும்விதமாக அமைந்துள்ளது. இது தொடர்பாக நாள்தோறும் புதிய தகவல்களும் மீம்ஸ்களும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
இந்த நிலையில், பல்வேறு படங்களில் நடித்துவரும் இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி, சிவகங்கை மாவட்டம் கீழடிக்கு நேரடியாகச் சென்று அகழாய்வுப் பணிகளை பார்வையிட்டுள்ளார். கீழடியின் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு தமிழர் தொன்மை காப்போம்...! என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
-
தமிழர் தொன்மை காப்போம்..! pic.twitter.com/inp7yvZILr
— P.samuthirakani (@thondankani) October 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">தமிழர் தொன்மை காப்போம்..! pic.twitter.com/inp7yvZILr
— P.samuthirakani (@thondankani) October 1, 2019தமிழர் தொன்மை காப்போம்..! pic.twitter.com/inp7yvZILr
— P.samuthirakani (@thondankani) October 1, 2019
இதனிடையே தமிழரின் தொன்மை குறித்து அறிந்துகொள்ள பொதுமக்களுக்கும் கீழடிக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.