சமுத்திரக்கனி நடித்து, இயக்கியுள்ள படம், 'விநோதய சித்தம்'. இவருடன் முனிஸ்காந்த், சஞ்சிதா ஷெட்டி, ஜெயபிரகாஷ், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் ஜீ5 ஓடிடியில் இன்று (அக். 13) வெளியாகிறது.
'விநோதய சித்தம்' திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (அக். 12) சென்னை சாலிகிராமம் பிரசாத் அரங்கில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய சமுத்திரக்கனி, "விநோதய சித்தம் படத்தில் நடித்த பிறகு உளவியல் ரீதியாக எனக்குள் மாறுதல் ஏற்பட்டுவிட்டது. இனி பேச்சைக் குறைக்க முடிவு செய்துவிட்டேன்.
18 ஆண்டுகளுக்கு முன்பு கே. பாலசந்தருடன் நாடகம் ஒன்று பார்த்தேன். அதிலிருந்து உருவானதுதான் விநோயதய சித்தம். நான் எடுத்த, நடித்த படங்களிலேயே இதுதான் சிறப்பான பதிவு" எனக் கூறியுள்ளார்.
சஞ்சிதா ஷெட்டி கூறுகையில், "பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும்போது எனது அப்பாவுக்கு விபத்து ஏற்பட்டது. அப்பாவுக்கு விருப்பமானவரை தான் திருமணம் செய்துகொள்வதாக எனது தங்கை சொன்னார். அதுபோன்றே இந்தப் படத்தின் கதையும் இருந்தது.
என் தம்பி ஒன்று ஆண்டுகளாக ஒரு பெண்ணை விரும்பினான். என் தந்தை சாதி பிரச்சினையால் தம்பியின் காதலை ஏற்கவில்லை. திருமணம் செய்தால் அந்தப் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என உறுதியாக இருந்து அப்பாவைச் சம்மதிக்க வைத்து அதே பெண்ணை திருமணம் செய்தான். இதுவும் படத்தின் கதையில் இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஜாங்கோ பட ட்ரெய்லர் வெளியீடு!