தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர் எனப் பன்முகத்திறமை கொண்டவர் சமுத்திரக்கனி. தமிழ், தெலுங்கு போன்ற மொழிப் படங்களில் பிஸியாக நடித்துவரும் இவர் தற்போது பிரசாந்துடன், ‘அந்தகன்’ படப்பிடிப்பில் நடித்துவருகிறார்.
இதற்கிடையில் நேற்று (ஏப்ரல் 26) சமுத்திரக்கனி தனது 47ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதனையொட்டி அவருக்குத் திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் வாழ்த்துகளைத் தெறிக்கவிட்டனர்.
இந்நிலையில் சமுத்திரக்கனி தனது பிறந்தநாளை ‘அந்தகன்’ படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின்றன.
இதில், படத்தின் நாயகன் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஓடிடியில் வெளியாகும் சுல்தான்!