'வாரணம் ஆயிரம்' படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் நடிகை சமீரா ரெட்டி. இவர் கடந்த 2014ஆம் ஆண்டு தொழிலதிபர் அக்ஷய் வர்தேவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த 2015ஆம் ஆண்டு ஒரு மகனும், கடந்த ஆண்டு ஒரு மகளும் பிறந்தனர்.
இந்நிலையில் சமீரா ரெட்டி தனது மகன், மகள் செய்யும் குறும்புத்தனத்தை வீடியோவாக எடுத்து, அடிக்கடி தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது அவர் ரஜினிகாந்த் ஸ்டைலில், தனது மகள் ஸ்டைலாக கண்ணாடி அணியும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
10 மாத குழந்தை ரஜினி ஸ்டைலில், கண்ணாடியை ஸ்டைலாக அணியும் அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:நண்பர்களுடன் வெளிநாட்டு ட்ரிப் - லூட்டி அடித்த விஜய்யின் அன்சீன் பிக்