ETV Bharat / sitara

இருபால் ஈர்ப்புகொண்ட பெண்ணாக நடிக்கும் சமந்தா - சமந்தா படங்கள்

நடிகை சமந்தா 'Arrangements Of Love' என்ற சர்வதேச திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சமந்தா, samantha with Philip John
சமந்தா, samantha with Philip John
author img

By

Published : Nov 26, 2021, 12:09 PM IST

Updated : Nov 26, 2021, 12:16 PM IST

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் பிஸியாக நடித்துவரும் சமந்தா திருமண விவாகரத்திற்குப் பிறகு பல புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் தற்போது பன்னாட்டு அளவில் தயராகும், 'Arrangements Of Love' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். Timeri N Murari எழுதிய புதினத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகிவருகிறது.

பாஃப்டா விருதுபெற்ற ஹாலிவுட் இயக்குநர் பிலிப்ஜான் இயக்கவுள்ள இப்படத்தை 'ஓ பேபி' தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பில் சமந்தா, இருபால் ஈர்ப்பு (BISEXUAL) கொண்ட பெண்ணாக நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து சமந்தா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "அரேஞ்ச்மென்ட்ஸ் ஆஃப் லவ் மூலம் புதிய உலகம் எனக்குப் பிறக்கப்போகிறது. இதுபோன்ற ஒரு கதையை நான் கேட்டது இல்லை. பிலிப் ஜானுடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நான் மீண்டும் ஒருமுறை சுனிதாவுடன் பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். ஓ பேபியில் நாங்கள் பெற்ற வெற்றியைவிட இந்த வெற்றி பெரிதாக இருக்கும். இந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் சவாலாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: உயிருக்குப் போராடும் சிவசங்கருக்கு உதவ முன்வந்த சோனு சூட்

Last Updated : Nov 26, 2021, 12:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.