தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் கேப் விடாமல் நடித்து வருபவர் நடிகை சமந்தா. சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் சமந்தா, அடிக்கடி தனது ரசிகர்களுடன் உரையாடுவார். அதேபோன்று, சமந்தாவிற்கு ஆன்மிக விஷயங்களிலும் அதிக ஈடுபாடு உள்ளது.
இதனால்தான் ஆண்டுக்கு ஒருமுறையாவது சமந்தா, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாத யாத்திரையாக சென்று வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது சமந்தாவை கண்ட ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து புகைப்படம், வீடியோ எடுத்துள்ளனர். மேலும் சமந்தாவும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.
ஆனால் ஒரே ஒரு ரசிகர் மட்டும் சமந்தாவை பின்தொடர்ந்து வீடியோ எடுத்துக்கொண்டே சென்றுள்ளார். இதை பார்த்து கடுப்பான சமந்தா, அந்த ரசிகரை கடுமையாக திட்டியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், ”ஒழுங்கா நட. இந்த புகைப்படம், வீடியோ எடுக்குற வேலையெல்லாம் வச்சிக்காத” என்று அந்த ரசிகரிடம் அவர் கடுமையாக பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: காப்பியடித்து சர்ச்சையில் மாட்டிக்கொண்ட கியாரா அத்வானியின் டாப்லெஸ் புகைப்படம்!