ETV Bharat / sitara

எங்கிருந்து தொடங்கியதுனு தெரியல - புலம்பும் சமந்தா - latest kollywood news

நடிகை சமந்தா விவாகரத்துப் பெறவுள்ளதாக வெளியான செய்தி குறித்து முதல்முறையாக வாய் திறந்துள்ளார்.

சமந்தா
சமந்தா
author img

By

Published : Sep 30, 2021, 11:34 AM IST

நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்தபிறகு தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் பிஸியாக நடித்துவருபவர் சமந்தா. இவர் திருமணத்திற்குப் பிறகு, நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனியைச் சேர்த்து சமந்தா அக்கினேனி எனப் பயன்படுத்தினார்.

இதனிடையே சமீபத்தில் சமந்தா தனது ட்விட்டர் பக்கத்திலிருந்த சமந்தா அக்கினேனி பெயரை நீக்கிவிட்டு வெறும் S என்று மாற்றினார். உடனே நெட்டிசன்கள் சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாகவும், விரைவில் இருவரும் பிரிந்துவிடுவார்கள் எனவும் வதந்தி பரப்ப ஆரம்பித்தனர்.

இதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்காமலிருந்த சமந்தா முதல்முறையாக நேற்று (செப். 29) இது குறித்து மனந்திறந்துள்ளார். இது குறித்து நேற்று சமந்தா லைவ்வில் பேசும்போது, "நான் மும்பைக்கு செல்லவிருப்பதாகக் கூறுகின்றனர். இந்த வதந்தி எங்கிருந்து தொடங்கியது என எனக்குத் தெரியவில்லை.

இதுவும் நூறு வதந்திகளைப் போல், உண்மை இல்லை. ஹைதராபாத் என் வீடு; எப்போதுமே என் வீடுதான். ஹைதராபாத் எனக்கு நிறைய தந்திருக்கிறது. நான் தொடர்ந்து இங்குதான் வாழ்வேன்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நடிகை சமந்தா செய்த காரியம்; ஆடிப்போன ரசிகர் பட்டாளம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.