தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியாக வலம்வரும் நடிகை சமந்தா 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு படங்களில் கவனம் செலுத்திவந்த இவர்கள், அக்டோபர் 2 ஆம் தேதி விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.
இந்த செய்தி வெளியானதிலிருந்து பலரும் அதற்கு காரணம் சமந்தா தான் என வதந்திகளைப் பரப்பினர். இந்நிலையில் நாக சைதன்யாவை பிரிந்தது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு சமந்தா பேட்டியளித்துள்ளார், " உங்களுக்கு ஒரு நாள் மோசமாகச் செல்கிறது என்றால் அதை ஏற்றுக்கொண்டு புரிந்து நடந்து கொள்ளுங்கள்.
நமக்கு வரும் கஷ்டங்களை எதிர்கொண்டாலே வேலைகள் எளிதாகிவிடும். நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட பிரிவால், நான் உயிரிழந்துவிடுவேன் என நினைத்தேன். ஆனால் இவ்வளவு வலிமையாக இருப்பேன் என நினைக்கவில்லை .
என் வலிமையை கண்டு பெருமைப்படுகிறேன். நான் இவ்வளவு வலிமையானவள் என்பது இதற்கு முன்பு தெரியாது. ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் அன்பிற்கும் தகுதியாக இருக்கிறேனா என்பது கூட தெரியவில்லை" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இருபால் ஈர்ப்புகொண்ட பெண்ணாக நடிக்கும் சமந்தா