ETV Bharat / sitara

சமந்தாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படக்குழு - IFFM 2021

இந்திய திரைப்பட விழாவில் சிறந்த நடிகையாகத் தேர்வு செய்த சமந்தாவுக்கு, 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படக்குழுவினர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

காத்துவாக்குல ரெண்டு காதல்
காத்துவாக்குல ரெண்டு காதல்
author img

By

Published : Aug 23, 2021, 10:57 AM IST

நடிகை சமந்தா நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியான தொடர், 'தி ஃபேமிலி மேன் 2'. இலங்கைத் தமிழர்கள் குறித்து தவறான தகவல்களை காட்சிப்படுத்தியுள்ளதாகக் கூறி, அரசியல் கட்சியினர் பலரும் இத்தொடரைத் தடை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

இருப்பினும் பல எதிர்ப்புகளை மீறி, 'தி ஃபேமிலி மேன் 2' தொடர் வெளியானது. இத்தொடரில் சிறப்பாக நடித்ததற்காக தற்போது சமந்தாவுக்கு, மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில், சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. இதனையொட்டி இவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள், திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

காத்துவாக்குல ரெண்டு காதல் படக்குழு
காத்துவாக்குல ரெண்டு காதல் படக்குழு

இந்நிலையில் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த நடிகையாகத் தேர்வு செய்த சமந்தாவுக்கு, 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படக்குழுவினர் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.

அவருக்குப் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடும்போதும், விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் உடனிருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ’ஒத்த செருப்பு’ பட ரீமேக் ஷூட்டிங்: விபத்தில் சிக்கிய அபிஷேக் பச்சன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.