ETV Bharat / sitara

நாகசைதன்யா பிரிவு பதிவை நீக்கிய சமந்தா: சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு கொண்டாட்டம்! - சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கில் ஈடுபட்ட சமந்தா

சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு விளையாடும் புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டிருக்கும் அதே வேளையில், நாக சைதன்யாவைப் பிரிந்ததாக அறிவித்த தனது பிரிவு பதிவை சமந்தா நீக்கியுள்ளது இணையத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு கொண்டாட்டம்

author img

By

Published : Jan 21, 2022, 1:34 PM IST

சாகசங்களை விரும்பும் நடிகையான சமந்தா, தற்போது சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு, குளிர்கால நடைபயணம் எனக் கொண்டாட்டமாகப் பொழுதை கழித்துவருகிறார். பனிமூடிய மலைகளில் உள்ள சமந்தாவின் புகைப்படங்கள் தலைப்புச் செய்திகளாக இடம்பெற்றுவரும் அதே வேளையில், அவரது முந்தைய பிரிவு பதிவானது தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸ் ஆல்ப்ஸில் உள்ள விடுமுறை ஓய்வு விடுதி, ஸ்கை பகுதியான வெர்பியரில் எடுத்த புகைப்படமொன்றை நேற்றிரவு (ஜனவரி 20) அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் சமந்தா. புகைப்படத்தைப் பகிர்ந்த சமந்தா, நான்காவது நாள் குளிர்கால விளையாட்டில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் அதில் பனிச்சறுக்கு எளிதானது அல்ல, ஆனால் வேடிக்கையானது என அவர் தெரிவித்துள்ளார். புகைப்படத்தில் மஞ்சள் நிற ஜாக்கெட், வெள்ளை டெனிம், ஹெல்மெட், ஸ்கை கண்ணாடிகளை அணிந்து க்யூட் போஸ் கொடுத்துள்ளார். புகைப்படத்தின் கேப்ஷனாக, நான்காவது நாள் மாயாஜாலம் நடக்கும் 🤍#skiingainteasybutitsureisfun என்றும் எழுதியுள்ளார்.

புதிய புகைப்படத்தை பதிவிட்டுள்ள அதே வேளையில் நாக சைதன்யாவைப் பிரிவதாக அறிவித்த பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார் சமந்தா. இதனை இந்த முன்னாள் ஜோடிகளின் சமூக ஊடகப் பதிவுகளை உன்னிப்பாகக் கண்காணிக்கும் ரசிகர்கள் கண்டறிந்துள்ளனர். அத்துடன் பிரிவு பதிவானது நாக சைதன்யாவின் சமூக ஊடக பக்கத்தில் இருக்கும்போதே, சமந்தா தனது பிரிவு பதிவினை நீக்கியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

கடந்த அக்டோபர் 2ஆம் தேதி சமந்தா - நாகசைதன்யா ஜோடி சமூக ஊடகப் பக்கங்களில் தங்கள் பிரிவினையை அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சந்தானத்தின் 'AGEnT கண்ணாயிரம்' டீசர் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.