'கொலையுதிர் காலம்' பத்திரிகையாளர் சந்திப்பில், நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி பேசிய பேச்சு பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இதுதொடர்பாக ராதாரவிற்கு தமிழ் திரையுலகினர் பலரும் தங்களுடைய கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், ராதாரவியின் பேச்சு குறித்து முன்னணி நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
அய்யோ பாவம், நடிகர் ராதாரவி அவர்களே, உங்களை நிலைநிறுத்திக் கொள்ள நீங்கள் படும்பாடு இருக்கிறதே. நாங்கள் எல்லோரும் உங்களைப் பார்த்து பரிதாபப்படுகிறோம். பாவமான மனிதர் நீங்கள். உங்கள் ஆன்மாவோ அல்லது உங்களுக்குள் மிச்சமிருக்கும் ஏதோ ஒன்றோ அமைதியை தேடிக் கொள்ளட்டும். நயன்தாராவின் அடுத்த சூப்பர்ஹிட் படத்துக்கு உங்களுக்கு டிக்கெட் அனுப்புகிறோம். பாப்கார்ன் சாப்பிட்டுவிட்டு இளைப்பாறுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.