சென்ற வாரம் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் பொருட்டு மக்கள் பல கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வரும் நிலையில் பெண்களுக்கு எதிராகவும் ஒரு தரப்பினர் குற்றம் சாட்டிவரும் அவல நிலையும் தொடர்ந்து வருகிறது.
நேற்று டேனியல் ஸ்ரவன் என்னும் இயக்குநர் சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை பகிர்ந்து மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தினார். பெண்களும் குறிப்பாக நடிகைகளும், பெண் பிரபலங்களும் இதை போன்ற கமெண்டுகளால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தச் சிக்கல்களுக்கு முடிவு கட்டும் வண்ணம் சைபர் புல்லிங்கை (cyber bullying), அதவாவது பெண்களை இணையத்தில் கொடுமைப்படுத்தினால், முக்கிய குற்றமாக அறிவித்துள்ளனர் காவல் துறையினர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடிகைகளுக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிராகவும் பதிவிடும் நெட்டிசன்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என்றும், குற்றவாளி துரிதமாகப் பிடிக்கப்படுவார் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தச் செய்தியை நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பெண்களுக்கு எதிராகப் பதிவிடுபவர்களுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: 'நோ டைம் டூ டை' - மிரட்டும் 'ஜேம்ஸ் பாண்ட்'