நடிகை வித்யா பாலன் நடிப்பில் வெளியான 'மிஷன் மங்கள்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்தவர் சகுந்தலா தேவி. சிறு வயதிலேயே தானாகக் கணக்குகளைத் தீர்க்கப் பழகி கொண்டவர். பழைய நூற்றாண்டின் தேதியைச் சொன்னாலும் கூட உடனே அதன் கிழமையை சொல்லி விடும் அளவுக்கு கணக்கில் கில்லாடி. சிக்கலான கணக்குகளையும் உடனே தீர்த்து விடுவார்.
இவரது இந்த அதீத திறன் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. வேகமான 'மனிதக் கணினி'யாக இருந்தவர் 2013ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
-
Excitement is multiplying each day! Time to dig into the 'root' of the mathematical genius, #ShakuntalaDevi. #FilmingBegins @sonypicsprodns @Abundantia_Ent @anumenon1805 @vikramix @SnehaRajani pic.twitter.com/Ayz2TNlePF
— vidya balan (@vidya_balan) September 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Excitement is multiplying each day! Time to dig into the 'root' of the mathematical genius, #ShakuntalaDevi. #FilmingBegins @sonypicsprodns @Abundantia_Ent @anumenon1805 @vikramix @SnehaRajani pic.twitter.com/Ayz2TNlePF
— vidya balan (@vidya_balan) September 16, 2019Excitement is multiplying each day! Time to dig into the 'root' of the mathematical genius, #ShakuntalaDevi. #FilmingBegins @sonypicsprodns @Abundantia_Ent @anumenon1805 @vikramix @SnehaRajani pic.twitter.com/Ayz2TNlePF
— vidya balan (@vidya_balan) September 16, 2019
இதனையடுத்து தற்போது இவரது வாழ்க்கைக் கதை சினிமாவாகிறது. 'சகுந்தலா தேவி'யாக வித்யாபாலன் நடிக்கிறார். ரோனிஸ்குருவாலா தயாரிக்கும் இப்படத்தை அனு மேனன் இயக்குகிறார். தற்போது வித்யா பாலனின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. அதில் சகுந்தலா தேவியைப் போன்று முடியை குட்டையாக வெட்டியுள்ளார், வித்யா பாலன். படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்குகிறது.
ஏற்கனவே இவர் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறான 'டர்ட்டி பிக்சர்' படத்தில் நடித்ததைப் பாராட்டி தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.