ETV Bharat / sitara

'டெடி'யை அணைத்துக் கொண்ட சாக்‌ஷி அகர்வால்! - ஆர்யாவின் டெடி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 'அவ்வா அவ்வா' பாடல் பாடி, தமிழ் ரசிகர்கள் மனதில் நின்ற சாக்‌ஷி அகர்வால், அதன் பின் தமிழ் சினிமாவில் பிஸியான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Sakshi Agarwal
author img

By

Published : Oct 16, 2019, 2:50 PM IST

ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் 'டெடி' படத்தின் படப்பிடிப்பில் சாக்‌ஷி அகர்வால் கலந்து கொண்டார்.

தமிழ்த் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆர்யா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'மகாமுனி', 'காப்பான்' ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதிலும் 'மகாமுனி' திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்த ஆர்யா, தனது மாறுபட்ட நடிப்பின் மூலமாக அனைத்து விதமான சினிமா ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றார்.
எப்போதும் கலகலப்பான மனோபாவம் கொண்ட நடிகர் ஆர்யா, தனது திரையுலக நண்பர்களுடன் எளிமையாக பழகக் கூடியவர். அதுமட்டுமில்லாமல் சில சமயங்களில் அவர்களுடன் கேளிக்கைகளிலும் ஆர்யா ஈடுபடுவதுண்டு.

'மிருதன்', 'டிக் டிக் டிக்' உள்ளிட்ட படங்களை இயக்கிய சக்தி சவுந்தர் ராஜன் இயக்கும் படம் 'டெடி'. இதில் ஆர்யாவும் அவரது மனைவி சாயிஷாவும் நடிக்கின்றனர். ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சாக்‌ஷி அகர்வால் நடிக்க உள்ளார். 'சாக்‌ஷி அகர்வால்' பிக்பாஸ் நிகிழ்ச்சிக்குப் பின் அடுத்தடுத்து தமிழ்ப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி, பிஸியான நடிகையாக மாறியுள்ளார். அதே வேளையில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் வலம் வருகிறார்.

இதையும் வாசிங்க: காப்பான் படத்துக்கு குட்பை: 'டெடி'க்கு ரெடியான சாயிஷா!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.