தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பாடகர், நடிகர் என பிஸியாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜி.வி. பிரகாஷ். இவர் 2013ஆம் ஆண்டு பாடகி சைந்தவியை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. தற்போது சைந்தவி முதல் முறையாக தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், இந்த எடை குறைந்த குழந்தை ஸ்லிங் அணிவது அற்புதமாகவும் வசதியாகவும் இருக்கிறது. இது ஒரு நல்ல அனுபவமாக உள்ளது. இதை என் மகள் ஒரு மாதமாக இருந்தபோதே பயன்படுத்தி வருகிறேன். அப்போதிருந்தே இந்த ஸ்லிங் அவளுக்கு மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக நான் உணர்கிறேன். இரவு நேரத்தில் இதில் இருக்கும் போது அவள் உடனே தூங்கி விடுகிறாள். சில நேரங்களில் அழும் போது இதில் அவளை வைத்திருந்தால், உடனே அழுகையை நிறுத்தி விடுகிறாள்.
அவளுக்கு இந்த ஸ்லிங் மிகவும் வசதியாக இருக்கிறது. பிரசவித்த தாய்மார்கள் எவ்வளவு நேரம் நீங்கள் இதை அணிந்திருந்தாலும் உங்களுக்கு முதுகு வலி ஏற்படாது. உங்கள் குழந்தை 4 வயது ஆகும் வரை இதை பயன்படுத்தலாம். எனவே, அனைத்து தாய்மார்களும் தயவுசெய்து இதை பயன்படுத்தி பாருங்கள். இது உங்களுக்கு அற்புதமான அனுபவமாக இருக்கும் என்று கூறினார்.