ETV Bharat / sitara

'சூப்பர் டா தம்பி' வாழ்த்தும் அசுரனின் அண்ணன்கள் !

author img

By

Published : Jun 17, 2021, 10:50 PM IST

Updated : Jun 17, 2021, 11:19 PM IST

’ஜகமே தந்திரம்’ படம் நாளை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில், ஹாலிவுட் இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ் தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளனர்.

சூப்பர் டா தம்பி
சூப்பர் டா தம்பி

'ஒய் நாட்' ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்' நாளை (ஜூன் 18) வெளியாகிறது.

தனுஷின் 40ஆவது படமான இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு, லண்டன், மதுரை உள்ளிட்ட ஊர்களில் நடைபெற்றது.

நாளை வெளியாகும் ஜகமே தந்திரம்

முன்னதாக, இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளத்தில் வைரலானது. மொத்தம் 190 நாடுகளில், 17 மொழிகளில் பிரமாண்டமாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் நாளை (ஜூன் 18) வெளியாகிறது.

ஜகமே தந்திரம்

இந்நிலையில், அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை இயக்கிட ரூஸோ பிரதர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ”சூப்பர் டா தம்பி! தனுஷுடன் இணைந்து பணியாற்றியது சிறப்பாக இருந்தது. ஜகமே தந்திரம் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளனர்.

Super da thambi! Excited to be working with @dhanushkraja and good luck with #JagameThandhiram @karthiksubbaraj @StudiosYNot
Watch the trailer HERE: https://t.co/ERrt7vfNy8

— Russo Brothers (@Russo_Brothers) June 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ரூஸோ பிரதர்ஸ் இயக்கும் புதிய ஹாலிவுட் படமான ’த கிரே மேன்’ படத்தில் தனுஷ் தற்போது நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தனுஷின் 'ஜகமே தந்திரம்' உருவான விதம் குறித்து படக்குழுவினர் பகிர்வு!

'ஒய் நாட்' ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்' நாளை (ஜூன் 18) வெளியாகிறது.

தனுஷின் 40ஆவது படமான இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு, லண்டன், மதுரை உள்ளிட்ட ஊர்களில் நடைபெற்றது.

நாளை வெளியாகும் ஜகமே தந்திரம்

முன்னதாக, இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளத்தில் வைரலானது. மொத்தம் 190 நாடுகளில், 17 மொழிகளில் பிரமாண்டமாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் நாளை (ஜூன் 18) வெளியாகிறது.

ஜகமே தந்திரம்

இந்நிலையில், அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை இயக்கிட ரூஸோ பிரதர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ”சூப்பர் டா தம்பி! தனுஷுடன் இணைந்து பணியாற்றியது சிறப்பாக இருந்தது. ஜகமே தந்திரம் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளனர்.

ரூஸோ பிரதர்ஸ் இயக்கும் புதிய ஹாலிவுட் படமான ’த கிரே மேன்’ படத்தில் தனுஷ் தற்போது நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தனுஷின் 'ஜகமே தந்திரம்' உருவான விதம் குறித்து படக்குழுவினர் பகிர்வு!

Last Updated : Jun 17, 2021, 11:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.