அட்லி - விஜய் கூட்டணியில் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'பிகில்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் ட்ரெய்லர் சனிக்கிழமை மாலை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ரசிகர்கள் மட்டுமல்லாது கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் பிரபலங்களும் ட்ரெய்லரைப் பார்த்து பாராட்டி வருகின்றனர். இந்த ட்ரெய்லர் இதுவரை 2.2 கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ரஸல் அர்னால்ட் தனது சமூகவலைதளப்பக்கத்தில், விஜயை தனக்கு அறிமுகம் செய்து வைத்த சீனிவாசனுக்கு நன்றி என்றும், 'பிகில்' ட்ரெய்லரை தான் தான் மிகவும் ரசித்து பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக ராயப்பன் கதாபாத்திரம் ’அந்தர் மாஸாக’ உள்ளதாக கூறிய அவர், தனக்கு இரண்டு டிக்கெட் வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த ட்வீட்டால் விஜய் ரசிகர்கள் அவரைப் பாராட்டியும் கொண்டாடியும் வருகின்றனர்.
இதையும் வாசிங்க: என்னடா இது பிகிலுக்கு வந்த சோதனை!