ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் திரைப்படம் 'RRR'. தற்போது இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
சுதந்திரப் போராட்ட வீரர்கள் அல்லுரி சீதாராம ராஜூ, குமரம் பீம் ஆகிய இருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து RRR திரைப்படம் உருவாகிவருகிறது. சினிமா ரசிகர்கள் இந்தப் படத்தின் டீசரை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், படக்குழுவினர், கிளைமேக்ஸ் படப்பிடிப்பு தொடங்கியதை அறிவிக்கும்விதமாக புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டிருந்தனர்.
இது ரசிகர்களிடையே படம் குறித்தான எதிர்பார்ப்பை அதிகரித்தது. மேலும் இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடா, மலையாளம் ஆகிய மொழிகளில் அக்டோபர் 13ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்தனர்.
-
#Sita ❤️💚 #RRRMovie #HappyBirthdayAliaBhatt pic.twitter.com/bOspk071gz
— RRR Movie (@RRRMovie) March 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Sita ❤️💚 #RRRMovie #HappyBirthdayAliaBhatt pic.twitter.com/bOspk071gz
— RRR Movie (@RRRMovie) March 15, 2021#Sita ❤️💚 #RRRMovie #HappyBirthdayAliaBhatt pic.twitter.com/bOspk071gz
— RRR Movie (@RRRMovie) March 15, 2021
இந்நிலையில், ஆலியாவின் 28ஆவது பிறந்தநாளான இன்று (மார்ச் 15), படக்குழுவினர் அவரது கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் சீதா கதாபாத்திரத்தில் ஆலியா நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் சீதாராம ராஜூ என்னும் கதாபாத்திரத்தில் காவல் துறை அலுவலராக நடிக்கும் ராம் சரணுக்கு ஆலியா பட் ஜோடியாக நடிக்கிறார்.