டி சி காமிக்ஸ் கதாபாத்திரங்களில் ரசிகர்கள் பலரும் விரும்பும் பாத்திரமாக இருப்பது ’பேட் மேன்’. இன்று வரை பேட் மேன் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு கூடிக்கொண்டேதான் செல்கிறது.
கோத்தம் நகரத்தை தீய சக்திகளிடமிருந்து பாதுகாத்து, தனது அடையாளத்தையும் வெளியுலத்திடமிருந்து மறைத்து, பேட் மேனாக விளங்கும் புரூஸ் வெய்ன் பாத்திரம் வாழ்ந்து வரும். இதுவரை பேட் மேன் திரைப்படங்களை டிம் பர்டன், ஜோயல் ஸ்குமேச்சர், கிறிஸ்டோபர் நோலன் போன்ற பல இயக்குநர்கள் கையில் எடுத்து ஹேட்ரிக் ஹிட் கொடுத்துள்ளனர்.
மைகல் கியட்டன், கிறிஸ்டின் பேல் போன்ற நடிகர்கள் பேட் மேன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளனர். இந்நிலையில் அண்மையில் 'த பேட் மேன்' திரைப்படத்தின் டீஸர் ட்ரெய்லர், டிசி ஃபேன்டம் ஆன்லைன் நிகழ்ச்சியில் வெளியானது. மேட் ரீவ்ஸ் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில் 'டிவைலைட்', 'டெனட்' போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள ராபர்ட் பேட்டின்சன் பேட் மேனாக நடித்திருக்கிறார்.
இதுவரை வந்த 'பேட் மேன்' திரைப்படங்களிலேயே கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ’டார்க் நைட்’ திரைப்படம் தான் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து தற்போது மேட் ரீவ்ஸ் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தின் டீஸர் ட்ரைலர், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கண்ணாபின்னாவென எகிர வைத்துள்ளது.
ராபர்ட் பேட்டின்சன் ஏற்கனவே கிறிஸ்டோபர் நோலனின் 'டெனட்' திரைப்படத்தில் நடித்து முடித்து, ரிலீஸுக்காக காத்திருக்கும் நிலையில், ’பேட் மேன்’ கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
Robert Pattinson is #TheBatman. Watch the #DCFandome Teaser Trailer now. pic.twitter.com/vhRXE7YlCA
— The Batman (@TheBatman) August 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Robert Pattinson is #TheBatman. Watch the #DCFandome Teaser Trailer now. pic.twitter.com/vhRXE7YlCA
— The Batman (@TheBatman) August 23, 2020Robert Pattinson is #TheBatman. Watch the #DCFandome Teaser Trailer now. pic.twitter.com/vhRXE7YlCA
— The Batman (@TheBatman) August 23, 2020
முன்னதாக கரோனா தொற்றுப் பரவல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், வருகிற செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆல்ஃப்ரட் பென்னிவர்த் கதாபாத்திரத்திற்கும், புரூஸ் வெய்ன் கதாபாத்திரத்திற்குமான பந்தத்தை மையப்படுத்தி இந்தப் படத்தின் கதை இருக்கும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இன்னும் மூன்று மாத கால படப்பிடிப்பு எஞ்சியுள்ளது என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடையும் என்றும் கூறப்படுகிறது. வார்னர் ப்ரதர்ஸ் தயாரிக்கும் இந்தத் திரைப்படத்தின் வெளியீடு, அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து, அக்டோபர் 1ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...படப்பிடிப்பிற்குத் தயாரான ராபர்ட் பாட்டின்சனின் 'தி பேட்மேன்'