சென்னை: ஃபெப்சி தலைவராக இயக்குநர் ஆர்.கே செல்வமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஃபெப்சி அமைப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும். கேப்டன் பிரபாகரன் திரைப்படப் புகழ் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி கடந்த இரண்டு முறை தலைவராக இருந்துவருகிறார்.
2021-23ஆம் ஆண்டிற்கான தேர்தல் இம்மாதம் 14ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தலைவர் பதவிக்கு செல்வமணி மூன்றாவது முறையாகப் போட்டியிட்டார். இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தலைவர் பதவிக்கு அவரைத் தவிர்த்து யாரும் போட்டியிடாததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மேலும், பொதுச்செயலாளராக அங்கமுத்து சண்முகமும், பொருளாளராகச் சுவாமிநாதன் என 13 பதவிகளுக்குப் போட்டியின்றி தேர்வாகினர்.