ETV Bharat / sitara

HBD ரிஷி கபூர்: முகமோ குழந்தை... பேசினால் சர்ச்சை... பாலிவுட்டின் ட்ரெண்ட் செட்டர் லவ்வர் பாய்! - சினிமா

வட இந்தியாவில் மாட்டுக்கறி உணவுமுறைக்காக பலரும் தாக்கப்பட்டு வந்த நாள்களில், “மதத்தை எதற்காக உணவுடன் தொடர்புபடுத்துகிறீர்கள்? நான் மாட்டுக்கறி உண்ணும் இந்து. என் உணவுப் பழக்கத்தால் நான் பிற பக்தர்களை விட குறைந்தவன் ஆகிவிடுவேனா?” என தன்னையே முன்னுதாரணமாக்கி குரல் எழுப்பிய வெகு சில நடிகர்களில் ஒருவர் ரிஷி கபூர்.

ரிஷி கபூர்
ரிஷி கபூர்
author img

By

Published : Sep 4, 2021, 10:10 AM IST

Updated : Sep 4, 2021, 10:30 AM IST

பழம்பெரும் பாலிவுட் நடிகர் ராஜ் கபூரின் மகனாகவும், இன்றைய தலைமுறை சினிமா ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் ரன்பீர் கபூரின் தந்தையாகவும் அனைவராலும் அறியப்படும் நடிகர் ரிஷி கபூர், தன் மூன்று வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக ஆக திரை உலகில் அடி எடுத்து வைத்தார்.

ஹீரோவாகும் முன்னரே தேசிய விருது

தொடர்ந்து தன் பதின்ம வயதில் 1970ஆம் ஆண்டு இளம் வயது ராஜ் கபூராக அவர் நடித்த ’மேரா நாம் ஜோக்கர்’ படத்திற்காக தேசிய விருதையும் வென்றார்.

க்ளாசிக் காதல் கதை ’பாபி’

ரிஷி கபூர் - டிம்பிள் கபாடியா
ரிஷி கபூர் - டிம்பிள் கபாடியா

அதனையடுத்து தன் 21ஆம் வயதில் பாலிவுட்டின் மாபெரும் ஹிட் படங்களில் ஒன்றான ’பாபி’படத்தின் மூலம் டிம்பிள் கபாடியாவுடன் ஹீரோவாக திரையுலகில் தன் பயணத்தைத் தொடங்கினார். டீனேஜ் காதல் படங்களுக்கு பாலிவுட் திரையுலகில் ட்ரெண்ட் செட்டராக விளங்கிய இப்படம், அன்றைய சோவியத் யூனியனில் சக்கைபோடு போட்டது.

’பாபி’ ஜோடி
’பாபி’ ஜோடி

ரிஷி கபூர்-டிம்பிள் கபாடியா ஜோடி ஏகோபித்த ரசிகர்களால் அன்றைய காலத்தில் கொண்டாடித் தீர்க்கப்பட்டது. ‘ஹம் தும் ஏக் கம்ரே மே...’, ’மே ஷாயர் தோ நஹி...’ என இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை இன்றளவும் எங்கு கேட்டாலும் குழந்தைத் தன்மை நீங்காமல் காதல் ததும்ப பாடும் ரிஷி கபூரின் முகமே முதலில் நியாபகத்துக்கு வரும்.

ஸ்வெட்டர் நாயகன்

ரிஷி கபூர்
ரிஷி கபூர்

லவ்வர் பாயாக இன்றளவும் கொண்டாடப்படும் ரிஷி கபூர், ஸ்வெட்டர் அணியாமல் நடித்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு முன்னால், குளிர் பிரதேசங்களில் ஸ்வட்டர், மஃப்ளர் அணிந்து டூயட் பாடி ட்ரெண்ட் செட் செய்த பெருமை ரிஷி கபூரையே சேரும். ஸ்வெட்டர்களை பராமரிப்பது குறித்து தன் ரசிகர்களுக்க்கு ரிஷி கபூர் ட்விட்டரில் வகுப்பெடுத்த சுவாரஸ்ய சம்பவங்களும் உண்டு.

திருமணம்

நீத்து சிங் உடன் ரிஷி கபூர்
நீத்து சிங் உடன் ரிஷி கபூர்

தன் மனைவி நீது சிங்குடன் ஜஹீர்லா இன்ஸான், கபி கபி, தூஸ்ரா ஆத்மி ஆகிய படங்களில் நடித்த ரிஷி கபூர் அவரை 1980ஆம் ஆண்டு மணந்தார். இவர்களுக்கு ரன்பீர் கபூர், ரித்திமா கபீர் ஷாஹ்னி என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

பாலிவுட்டின் ’மோகன்’

தர்மேந்திரா, அமிதாப் பச்சன், வினோத் கண்ணா என முன்னணி நடிகர்கள் பாலிவுட் திரையுலகை ஆண்ட காலத்தில் ’ஸ்டார் கிட்’ஆக திரைப் பயணத்தைத் தொடங்கிய ரிஷி கபூர், தனக்கென ஒரு பாணியை அமைத்து 70, 80களின் காதல் நாயகனாக வலம் வந்து மக்களைக் கவர்ந்தார்.

ஸ்ரீதேவி உடன் ரிஷி கபூர்
ஸ்ரீதேவி உடன் ரிஷி கபூர்

’பாலிவுட்டின் மோகன்’ என்றே ரிஷி கபூரை அழைக்கலாம். அந்த அளவுக்கு 80களின் பல அழகான பாடல்கள் ரிஷி கபூருக்கு அமையப் பெற்றுள்ளன. தன் படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்களை தன் பல நேர்காணல்களிலும் குறிப்பிட்டு தன் நன்றிகளைப் பகிர்ந்துள்ளார் ரிஷி கபூர்.

’நான் மாட்டுக்கறி உண்ணும் இந்து’

தன் தைரியமான பேச்சுக்கும், சர்ச்சைக் கருத்துகளுக்கும் பெயர் போன ரிஷி கபூர், இன்றைய சமூக வலைதள காலத்திலும் இளம் நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் ட்விட்டரில் கோலோச்சி வந்தார்.

வட இந்தியாவில் மாட்டுக்கறி உணவுமுறைக்காக பலரும் தாக்கப்பட்டு வந்த நாள்களில், “மதத்தை எதற்காக உணவுடன் தொடர்புபடுத்துகிறீர்கள்? நான் மாட்டுக்கறி உண்ணும் இந்து. என் உணவுப் பழக்கத்தால் நான் பிற பக்தர்களை விட குறைந்தவன் ஆகிவிடுவேனா?” என தன்னையே முன்னுதாரணமாக்கி குரல் எழுப்பிய வெகு சில நடிகர்களில் ஒருவர் ரிஷி கபூர்.

ரன்பீர் ரிஷி கபூர்
ரன்பீர் ரிஷி கபூர்

புற்றுநோயுடன் போராட்டம்

2018ஆம் ஆண்டு முதல் புற்று நோயுடன் போராடி வந்த ரிஷி கபூர் நியூயார்க் சென்று சிகிச்சைப் பெற்று 2019ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார்.

குடும்பத்துடன் ரிஷி கபூர்
குடும்பத்துடன் ரிஷி கபூர்

ஆனால் தொடர்ந்து உடல்நிலை மீளாமல் சென்ற ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி உயிரிழந்தார். தொடர்ந்து வந்த, திரைத்துறையின் உயரிய விருதுகளில் ஒன்றான பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அன்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் எனப்படும் பாஃப்டா (BAFTA) விருதுகள் வழங்கும் விழாவில், ரிஷி கபூர் சென்ற ஆண்டு நினைவுகூரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரிஷி கபூர் மறைவு: இதயம் உடைந்த ரஜினி!

Last Updated : Sep 4, 2021, 10:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.