ETV Bharat / sitara

ராஜமெளலிகாரு... அதலாம் பண்ணமுடியாது: ராம் கோபால் வர்மா - ராஜமெளலி லேட்டஸ் செய்திகள்

ஹைதராபாத்: இயக்குநர் ராஜமெளலி விடுத்த பசுமை இந்தியா சேலஞ்சுக்கு ராம் கோபால் வர்மா தனது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

RGV
RGV
author img

By

Published : Nov 11, 2020, 4:09 PM IST

பசுமை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி தெலங்கானா அமைச்சர் சந்தோஷ் குமார் மரம் நடும் #GreenIndiaChallengeஐ சமூக வலைதளத்தில் அறிமுகப்படுத்தினார்.

இந்தச் சேலஞ்சில் மரக்கன்று ஒன்றை நட்டு, அதனைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு, அது குறித்து எடுத்துச் சொல்லி, மரக்கன்றுகள் நடுவதற்குப் பிறரையும் தூண்ட வேண்டும்.

இந்த சேலஞ்சை தெலுங்கு திரை நட்சத்திரம் மகேஷ் பாபு, தனது பிறந்தநாளில் சமூக வலைதளத்தில், #GreenIndiaChallengeஐ ட்ரெண்ட் ஆக்கினார்.

தனது பிறந்தநாளில், மரக்கன்றுகளை நட்ட மகேஷ் பாபு, நடிகர் விஜய், ஸ்ருதி ஹாசன் ஆகியோருக்கு சவால் விடுத்திருந்தார். இந்நிலையில், இந்தச் சேலஞ்சை ஏற்ற விஜய், மரக்கன்றுகளை நட்டு புகைப்படங்களை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. விஜய்யை தொடர்ந்து பல பிரபலங்களும் அவர்களது ரசிகர்களும் மரக்கன்றுகளை நட்டு புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தவண்ணம் உள்ளனர்.

  • Sir @ssrajamouli I am neither into green nor into challenges and I hate touching mud ..The plants deserve a much better person and not a selfish B like me ..Wish u and ur plants all the best 🙏 https://t.co/xusQ1a1ftR

    — Ram Gopal Varma (@RGVzoomin) November 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தற்போது ராம் சாரண் இந்த சேலஞ்சை இயக்குநர் ராஜமெளலிக்குப் பரிந்துரைத்தார். அதன்படி ராஜமெளலி தனது 'ஆர்ஆர்ஆர்' படக்குழுவினருடன் இந்த சேலஞ்சை செய்து முடித்தார். இதன்பின் ராஜமெளலி இந்த சேலஞ்சை இயக்குநர்கள் ராம் கோபால் வர்மா, பூரி ஜெகநாதனுக்கு விடுத்தார்.

ராஜமெளலியின் இந்த சேலஞ்சுக்கு ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் பசுமை இந்தியா திட்டத்திற்கு ஆதரவாகவோ எதிராகவோ இல்லை. எனக்குச் சகதியை தொடுவது பிடிக்காது. மரங்கள் சிறந்த மனிதர்களுக்கானது. என்னைப் போன்ற சுயநலம் மிக்கவர்களுக்கு இல்லை. உங்களுக்கும் நீங்கள் நட்டுவைத்த எல்ல மரக்கன்றுகளுக்கும் வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.