ஒடிசாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்தவர் தபு மிஷ்ரா. இந்தி, வங்காள மொழிகளில் 500க்கும் மேற்பட்ட பாடல்களை இவர் பாடியுள்ளார்.
இவருக்கு கரோனா தொற்று ஏற்பட வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனால், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடையத் தொடங்கியதையடுத்து உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வென்டிலேட்டர் உதவியுடன் கடந்த ஒரு மாதமாக சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில் அவரது நுரையீரலில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, அவர் மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மறைவு சக திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 5 லட்சம் கரோனா நிவாரண நிதி வழங்கிய இயக்குநர் சுசீந்தரன்