ETV Bharat / sitara

ரெஜினா கெஸன்ட்ராவின் த்ரில்லர் படம் 'எவரு' டீசர் ரிலீஸ்! - evaru teaser

ரெஜினா கெஸன்ட்ரா நடிப்பில் வெளியாகியுள்ள 'எவரு' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

evaru movie
author img

By

Published : Jul 20, 2019, 7:29 PM IST

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரெஜினா கெஸன்ட்ரா. அவ்வப்போது தனது ஹாட்டான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு சர்ச்சைகளை கிளப்புவதுண்டு. இந்நிலையில், ரெஜினா கெஸன்ட்ரா கதையின் நாயகியாக நடித்துள்ள 'எவரு' படத்தின் டீசர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒரு நிமிடம் 11 நொடிகள் இடம்பெறும் இந்த டீசரில் முதல் காட்சியே பரபரப்பை கிளப்புகிறது.

ரெஜினா கெஸன்ட்ரா தன்னை பாலியல் கொடுமைக்கு கட்டாயப்படுத்தும் நபரை கொலை செய்வது போன்று தோன்றுகிறது. முகம் மறைக்கப்பட்டு துப்பாக்கி தோட்டாக்கள் ஒருவரின் நெஞ்சை துளைக்கிறது. பெரும் பணக்காரரான ரெஜினா, எவ்வாறு இந்தப் பிரச்னையை எதிர்கொள்கிறார் என்பது படத்தின் டீசர் விளக்குகிறது. தமிழ்நாட்டு காவல்துறை அலுவலராக வரும் ஆத்வி சேஷ், இந்தக் கொலையை செய்தது யார் என ரெஜினா கெஸன்ட்ராவிடம் விசாரிக்கிறார்.

இதனைத் தொடர்ந்து வரும் காட்சிகள் குழப்பமடைய வைத்தாலும், டீசரின் கடைசி நொடியில் கெஜினா கெஸன்ட்ரா கொலைகாரியா அல்லது கற்பழிக்கப்பட்டாரா என்று பின்னணிக் குரலில் முடிவடைவது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் யார் கொலையாளி என்று ரெஜினாவிடம் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர். இப்படம் வரும் ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.