ETV Bharat / sitara

'கேஜிஎஃப் 2' வில் இணைந்த கமல் பட நாயகி - கேஜிஎஃப் 2 வில் இணைந்த கமல் பட நாயகி

பிரமாண்டமாக உருவாகி வரும் 'கேஜிஎஃப் 2' படத்தில் நடிகை ரவீனா டாண்டன் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

Raveena Tandon
Raveena Tandon
author img

By

Published : Feb 9, 2020, 7:55 PM IST

கன்னடத்தில் வெளியான 'கேஜிஎஃப்' திரைப்படம் தென்னிந்தியா மட்டுமின்றி, இந்தியா முழுவதிலும் உள்ள ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பிரசாந்த் நீல் இயக்கியிருந்த, இப்படத்தில் கன்னட நடிகர் யாஷ், ஆக்சன் காட்சிகளில் மாஸ் காட்டியிருப்பார்.

1970களில் கோலார் தங்கச் சுரங்கத்தில், ஏழை மக்களை அடிமையாக நடத்தும் வில்லனை கொலை செய்வதற்காக உள்ளே செல்லும் கதாநாயகன், வில்லனை எப்படிக் கொன்றார், அங்குள்ள மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பது போன்று கதை அமைக்கப்பட்டிருக்கும்.

தமிழில் இத்திரைப்படத்தை விஷாலின் விஎஃப்எஃப் நிறுவனம் வெளியிட்டது. தமிழிலும் இத்திரைப்படம் ஹிட் அடித்தது. இதனால் யாஷ் தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்தார். சமீபத்தில் 'கேஜிஎஃப்' திரைப்படத்திற்கு அதிரடி காட்சி அமைப்புகள் மற்றும் சிறப்புக் காட்சி ஆகிய இரு பிரிவுகளின் கீழ், தேசிய விருது வழங்கப்பட்டது

தற்போது கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இதற்காக கோலார் தங்கவயல் அருகே உள்ள சியானிடே மலைப்பகுதியில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது. சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதனையடுத்து இப்படத்தில் நடிகை ரவீனா டாண்டன் இணைந்துள்ளார். இவர் ஏற்கெனவே கமல் நடிப்பில் வெளியான 'ஆளவந்தான்' படத்தில் நடித்திருந்தார்.

கேஜிஎஃப் 2வில் இந்தி நடிகர் சஞ்சய் தத், 'வடசென்னை'படத்தில் நடித்த சரண் சக்தி ஆகியோரும் நடிக்கின்றனர்.

இதையும் படிங்க: கிறிஸ்தவ சமூகத்தைப் புண்படுத்தியது தொடர்பான வழக்கு: ரவீனா விளக்கம்

Intro:Body:

KGF 2 Update

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.