ETV Bharat / sitara

சீர்கெட்டு வரும் சமூகத்திற்கு மற்றுமொரு சாட்டை 'ராட்சசி' - திரைவிமர்சனம்

நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியாகியுள்ள 'ராட்சசி' படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

jyothika
author img

By

Published : Jul 9, 2019, 8:39 PM IST

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் கௌதம் ராஜ் இயக்கத்தில் நடிகை ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் 'ராட்சசி'. ஹரீஷ் பேரடி, பூர்ணிமா பாக்யராஜ், சத்தியன், கவிதா பாரதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைப்படம் ஜூலை 5ஆம் தேதி திரைக்கு வந்தது.

கொஞ்சம் கூட ஒழுக்கமே இல்லாத கிராமத்து அரசு பள்ளிக்கு, தலைமை ஆசிரியராக வருகிறார் கீதா ராணி (ஜோதிகா). படிப்பு என்றாலே கசக்கும் மாணவ-மாணவிகள், மொபைலில் பாட்டு கேட்டுக்கொண்டு வேலை செய்யவே யோசிக்கும் ஆசிரியர்கள், பள்ளிக்கூடம் அருகில் சிகரெட் பாக்கு விற்பனை செய்யும் பெட்டி கடை என இப்படி அந்த பள்ளியைச் சுற்றி சூழ்ந்திருக்கும் பிரச்னைகள்.

jyothika
ஜோதிகா

பற்றாக்குறைக்கு அரசு பள்ளி எந்த வகையிலும் முன்னேறக் கூடாது என நினைக்கும் தனியார் பள்ளி நடத்தும் உள்ளூர் தொழிலதிபர், மாணவர்களை கட்சிக் கூட்டத்திற்கு அழைத்துச் செல்லும் அரசியல்வாதி என கீதா ராணிக்கு ஏகப்பட்ட சிக்கல்கள், பிரச்னைகள். இவை அனைத்தையும் தாண்டி தன் பள்ளியை எல்லோரும் போற்றும் சிறப்பு பள்ளியாக மாற்றினாரா இல்லையா என்பது மீதிக்கதை.

வழக்கம் போலவே கொடுத்தக் காசுக்கு மேல் நடிக்கும் அதே ஜோதிகா, இறுக்கமான முகம், கண்டிப்பு, அன்பு என அத்தனைக்கும் ஈடு கொடுக்கிறார். மூன்று கேள்விகளை முன்வைக்கும் இடங்களில் கம்பீரம். ஆனால் சில இடங்களில் சண்டைக் காட்சி என கொஞ்சம் அதீத நடிப்பும் படத்தை சினிமாத்தனமாக மாற்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.ஜோதிகா தவிர்த்து மற்ற அனைவருக்குமே கொஞ்சம் வரையறுக்கப்பட்ட நடிப்புதான்.

jyothika
ஜோதிகா

விளையாட்டு ஆசிரியராக வரும் சத்யா, உதவி தலைமை ஆசிரியராக வரும் கவிதாபாரதி, தனியார் பள்ளி நிறுவனராக வரும் ஹரீஷ் பேரடி, நீண்ட ஆண்டுகளாக ஒரே பள்ளியில் பணியாற்றும் பூர்ணிமா பாக்யராஜ் ஏன்பா சும்மவே இருக்கிறார் என்பதற்கு பிற்பாதியில் வரும் உணர்வுபூர்வமான காட்சி என அனைவருமே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக கதிரேசனாக வரும் சிறுவன் மனதை ஈர்க்கிறார்.

jyothika
ராட்சசி படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி

'எத்தனை டீச்சர்ஸ் அவங்க குழந்தைகளை அரசு பள்ளியில படிக்க வைக்கிறீங்க? உங்க மேல உங்களுக்கே நம்பிக்கை இல்லாதப்போ நான் எப்படி உங்களை நம்பறது? சிதறிக் கிடக்குற சின்னத் தங்கத்துக்கு ஆசைப்பட்டு அதை எடுத்தா.. அங்கேயே நம்ம வாழ்க்கை நின்னுடும். புதையல் கிடைக்காது, 'கோவில் கும்பாபிஷேகத்திற்கு கொட்டிக் கொடுக்கும் நீங்கள் கல்விக்கண் திறக்கும் பள்ளிகளுக்கு கொடுப்பதில்லை... இப்படி படம் நெடுக கௌதம்ராஜ், பாரதி தம்பி ஆகியோர் தற்போதைய சமூகத்திற்கு தேவையான பல சாட்டையடி வசனங்களை புகுத்தியுள்ளனர்.

jyothika
பள்ளி மாணவர்கள்

இத்தனை விஷயங்கள் இருந்தும் படம் அப்படியே சமுத்திரகனி நடித்த 'சாட்டை' படத்தின் பெண் வெர்ஷனாக தெரிவதை மறுக்க முடியவில்லை. படத்தின் திரைக்கதை போக்கும் அப்படியே செல்வதையேனும் இயக்குநர் கௌதம்ராஜ் கொஞ்சம் மாற்றியிருக்கலாம். ஆனால் ஜோதிகா எங்கேயிருந்து எப்படி இந்தப் பள்ளிக்கு வந்தார் என்பது புத்திசாதுர்யமான திடீர் திருப்பம். ஷான் ரோல்டன் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் பெரிதாக மனதை ஈர்க்கவில்லை என்றாலும் பின்னணி கொஞ்சம் பலம் சேர்க்கிறது.

விளையாட்டுப் போட்டிகள், பள்ளியின் குழந்தைகளின் பகுதிகள் என கோகுல் பினாய் ஒளிப்பதிவு அருமை. பள்ளியை சீர்திருத்த நினைக்கும் ஆசிரியை கீதாராணியான ஜோதிகாவிடம், ஒரு கேள்வியை முன்வைக்க வேண்டியுள்ளது. உங்கள் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படிக்க வைத்துள்ளீர்களா என்பதுதான் அந்த கேள்வி.

jyothika
பூர்ணிமாக பாக்கியராஜ்

தற்போதெல்லாம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்படும் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை மையமாக வைத்து பணம் சம்பாதிப்பது ட்ரெண்டாகி வருகிறது என்பது மட்டும் தெளிவாகிறது. இருப்பினும் இம்மாதிரியான படங்கள் அவ்வப்போது வருவது சமூகத்திற்கு தேவையான ஒன்றே. மேலும் குடும்ப பார்வையாளர்களுக்கான சினிமாக்களின் வருகை குறைந்துவிட்ட நிலையில் இப்படியான படங்கள்தான் அந்த இடைவெளிகளை நிரப்புகின்றன.

Intro:ராட்சசி திரைவிமர்சனம்

Body:தயாரிப்பு - ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்
இயக்கம் - கௌதம ராஜ்
இசை - ஷான் ரோல்டன்
ஒளிப்பதிவு - கோகுல் benoy
வசனம். - கௌதம் ராஜ், பாரதி தம்பி
பாடல்கள். - யுகபாரதி, தனிக்கொடி ,முத்தமிழ்
நடிகர்கள். - ஜோதிகா, ஹரீஷ் பேரடி, பூர்ணிமா பாக்யராஜ், சத்தியன், கவிதா பாரதி மற்றும் பலர்

ஐயோ அந்தப் பள்ளியை... இப்படித்தான் புதுக் ஊர் கிராமமே கேட்டு அதிர்ச்சி அடைகிறது. கொஞ்சம் கூட ஒழுக்கமே இல்லாத கிராமத்து அரசு பள்ளி. பள்ளிக்கு தலைமை ஆசிரியராக வருகிறார் கீதா ராணி(ஜோதிகா) . பள்ளிக்கூடம் அருகில் சிகரெட் பாக்கு விற்பனை செய்யும் பெட்டி கடை ஒழுக்கமற்ற மாணவர்கள் சொந்தத் தொழில் நடத்தும் ஆசிரியர்கள் magazine கோலம் போடுதல் மொபைலில் பாட்டு கேட்டுக்கொண்டு வேலை செய்யவே யோசிக்கும் ஆசிரியர்கள் , படிப்பு என்றாலே கசக்கும் மாணவ, மாணவிகள், பற்றாக்குறைக்கு அரசு பள்ளி எந்த வகையிலும் முன்னேரக் கூடாது என நினைக்கும் தனியார் பள்ளி நடத்தும் உள்ளூர் தொழிலதிபர்,

மக்கள் எழுச்சி கட்சியினர் மாணவர்களை கட்சிக் கூட்டத்திற்கு அழைத்துச் செல்லும்
அரசியல்வாதி என கீதா ராணிக்கு ஏகப்பட்ட சிக்கல்கள், பிரச்னைகள். இவையனைத்தையும் தாண்டி தன் பள்ளியை நல்ல பள்ளியாக மாற்றினாரா இல்லையா என்பது மீதிக்கதை.

வழக்கம் போலவே கொடுத்தக் காசுக்கு மேல் நடிக்கும் அதே ஜோதிகா. இறுக்கமான முகம் , கண்டிப்பு, அன்பு, என அத்தனைக்கும் ஈடு கொடுக்கிறார். மூன்று கேள்விகளை முன்வைக்கும் இடங்களில் கம்பீரம்
ஆனால் சில இடங்களில் சண்டைக் காட்சி என கொஞ்சம் அதீத நடிப்பும் படத்தை சினிமாத்தனமாக மாற்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஜோதிகா தவிர்த்து மற்ற அனைவருக்குமே கொஞ்சம் வரையறுக்கப்பட்ட நடிப்புதான். விளையாட்டு ஆசிரியராக வரும் சத்தியn, உதவி தலைமை ஆசிரியராக வரும் கவிதாபாரதி, தனியார் பள்ளி நிறுவனராக வரும் ஹரீஷ் பேரடி, 10 மூன்று ஆண்டுகளாக ஒரே பள்ளியில் பணியாற்றும் பூர்ணிமா பாக்யராஜ் ஏன்பா சும்மவே இருக்கிறார் என்பதற்கு பின்பாதியில் வரும் உணர்வுபூர்வமான காட்சி என அனைவருமே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக கதிரேசனாக வரும் சிறுவன் மனதை ஈர்க்கிறார்.

கொஞ்சம் அதீத சினிமாத்தனம் தெரிந்தாலும் , தற்போதைய சமூகத்திற்கு தேவையான பல சாட்டையடி வசனங்கள் பளிச்சென மனதில் நிற்கின்றன .
'எத்தனை டீச்சர்ஸ் அவங்க அவங்க குழந்தைகளை அரசு பள்ளியில படிக்க வைக்கிறீங்க. உங்க மேல உங்களுக்கே நம்பிக்கை இல்லாதப்போ நான் எப்படி உங்களை நம்பறது'

'சிதறிக் கிடக்குற சின்னத் தங்கத்துக்கு ஆசைப்பட்டு அதை எடுத்தா அங்கேயே நம்ம வாழ்க்கை நின்னுடும். புதையல் கிடைக்காது'

கோவில் கும்பாபிஷேகத்திற்கு கொட்டிக் கொடுக்கும் நீங்கள் கல்விக்கண் திறக்கும் பள்ளிகளுக்கு கொடுப்பதில்லை

இப்படி படம் நெடுக கௌதம்ராஜ் மற்றும் பாரதி தம்பியின் சாட்டையடி வசனங்கள் குடும்ப பார்வையாளர்களை ஈர்க்கும். இருப்பினும் இவ்வளவு இருந்தும் படம் அப்படியே சமுத்திரகனி நடித்த 'சட்டை' படத்தின் பெண் வெர்ஷனாக தெரிவதை மறுக்க முடியவில்லை. படத்தின் திரைக்கதை போக்கும் அப்படியே செல்வதையேனும் இயக்குநர் கௌதம்ராஜ் கொஞ்சம் மாற்றியிருக்கலாம் . ஆனால் ஜோதிகா எங்கேயிருந்து எப்படி இந்தப் பள்ளிக்கு வந்தார் என்பது புத்திசாதுர்யமான திடீர் திருப்பம்

பாடல்கள் பெரிதாக மனதை ஈர்க்கவில்லை, பின்னணி கொஞ்சம் பலம். விளையாட்டுப் போட்டிகள், பள்ளியின் குழந்தைகளின் பகுதிகள் என கோகுல் பினாய் ஒளிபதிவு அருமை.

பள்ளியை சீர்திருத்த நினைக்கும் ஆசிரியை கீதாராணி ஒவ்வொருவரிடமும் மூன்று கேள்விகளை முன் வைக்கிறார் நாம் ஜோதிகாவிடம் ஒரு கேள்வியை முன்வைக்க வேண்டியுள்ளது ஜோதிகா உங்கள் குழந்தைகள் கவர்மெண்ட் பள்ளிகளில் படிக்க வைத்துள்ளீர்களா என்று கேட்கத் தோன்றுகிறது. தற்போதெல்லாம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்படும் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை மையமாக வைத்து பணம் சம்பாதிப்பது ட்ரெண்டாகி வருகிறது என்பது மட்டும் தெளிவாகிறது.

இருப்பினும் இம்மாதிரியான படங்கள் அவ்வப்போது வருவது சமூகத்திற்கு தேவையான ஒன்றே. மேலும் குடும்ப பார்வையாளர்களுக்கான சினிமாக்களின் வருகை குறைந்துவிட்ட நிலையில் இப்படியான படங்கள்தான் அந்த இடைவெளிகளை நிரப்புகின்றன .

Conclusion: 'ராட்சசி' - சீர்கெட்டு வரும் சமூகத்திற்கு மற்றுமொரு சாட்டை.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.