முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய இயக்குநர் ராம்குமார் சைக்கோ திரில்லர் படமான ராட்சசன் படத்தை இயக்கினார். இப்படம், 2018 அக்டோபர் 5ஆம் தேதி வெளியானது. இப்படத்தில், விஷ்ணு விஷால், அமலா பால், முனிஷ்காந்த், சரவணன் ஆகியோர் நடித்திருந்தனர்.
சென்னையில் தொடர்ச்சியாக பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்படும் கதைகளத்துடன் உருவான இப்படம், பார்ப்பவரை அதிர்வடையை வைத்தது. சைக்கோவாக நடித்திருந்த சரவணின் நடிப்பு பெருமளவில் பேசப்பட்டது. பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு படமாக இருந்தது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ராட்சசன் திரைப்படம் தெலுங்கில் ராக்சடுவாக ரீமேக் ஆகிறது. இப்படத்தில் பெல்லம்கொண்ட ஸ்ரீநிவாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். அமலா பால் கேரக்டரில் அனுபாமா பரமேஷ்வரன் நடிக்கிறார். சைக்கோ கேரக்டரில் யார் நடிக்கிறார் என்பதை வெளியிடாமல் படக்குழுவினர் சஸ்பென்சாக வைத்துள்ளனர். ரமேஷ் வர்மா இயக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். தற்போது தெலுங்கு ராக்சசடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.